சென்னை: தி.மு.க., நடத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில், தி.மு.க.,
தலைவர் கருணாநிதி, தென் சென்னையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்,
விருத்தாசலத்திலும் பேசுகின்றனர். பேச்சாளர்கள் பட்டியலில், நடிகை குஷ்பு
பெயர் இடம் பெறவில்லை இம்மாதம் 25ம்தேதி, தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு,
வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. கருணாநிதி
தென் சென்னையிலும், அன்பழகன் காஞ்சிபுரத்திலும், ஸ்டாலின்
விருத்தாசலத்திலும், அழகிரி மதுரையிலும், கனிமொழி தஞ்சாவூரிலும்,
வி.பி.துரைசாமி ஈரோட்டிலும் பேசுகின்றனர். தி.மு.க., நட்சத்திர பட்டாளங்களில் நடிகர் குமரிமுத்து மட்டுமே, இடம்
பெற்றுள்ளார். நடிகர்கள் மத்திய அமைச்சர் நெப்போலியன், வாகை சந்திரசேகர்,
பாக்யராஜ் போன்றவர்கள் இடம் பெறவில்லை. தி.மு.க., சார்பில் நடக்கும்
ஆர்ப்பாட்டங்கள், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில், நடிகை குஷ்பு இடம்
பெறுவார். ஆனால், பொதுக்கூட்டங்கள் பட்டியலில், குஷ்பு பெயர் இடம்
பெறவில்லை. இதனால், கட்சியிலிருந்து குஷ்பு ஓரங்கட்டப்படுகிறாரா என்ற
கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. dinamalar,com
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
வேறு ஒன்றுமில்லை..கட்சிக்குள் நடக்கும் போட்டிதான் காரணம். குஷ்புவை
எல்லோருமே தங்களது கோஷ்டி என்று சொல்லி தாங்கள் அழைக்கும்
கூட்டத்திற்குத்தான் வரவேண்டும் என்று குடுமிப்பிடி சண்டை போடுவதால்..அது
மேடை போட்டு உலகிற்கு தெரிய வேண்டாமே என்றுகூட இருக்கலாம். தலீவரின் நேரடி
பார்வையில் பின்னர் வேறு ஓர் தேதியில் மிகப்பிரம்மாண்டமான கூட்டத்தில்
அழைக்கப்படுவார். தினமலரின் செய்தியை படித்து மனம் நொந்த தொண்டர்களுக்காக
விரைவில் அறிவிப்பு வரலாம். திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு எதற்காக விழா
எடுக்கின்றார்கள்? கட்சிக்காக உயிர் விட்ட உத்தமர்களின் வாரிசுகள்
ஒதுக்கப்பட்டு..குஷ்பு போன்றோர் முன்னிலை படுத்தும் காட்சியை
காண்கின்றோம்..மிசா காலத்தில் உயிர் விட்ட தொண்டர்களின் வாரிசுகளுக்கு
ஏதும் செய்யாத கட்சி..ஆனால் பாருங்கள்..ஹிந்தி பேசும் குஷ்பு போன்றோருக்கு
உண்டான வரவேற்புக்களை..தொண்டர்களும் சரி தலைமைக்கு போட்டியாக குஷ்புவை
ஆதரிக்கும் போக்கினை காணும்போது..என்றைக்குமே குஷ்பு போன்றோரை கட்சி
கழற்றிவிடவே...டாது..என்ன..தொண்டர்களுக்கும்..மக்களுக்கும்..மிக தெளிவாக
மொழிப்போர் பற்றிய செய்திகளை ..பேச்சுக்களை குஷ்பு மூலம் கேட்கும் வாய்ப்பு
பறிபோனது. ஹ்ம்ம் மரியாக்களுக்கு இது ஓர் சோதனைகாலமோ? இடி போல செய்தியை
போட்டு தினமலர் எனக்கென்ன என்று அக்கடான்னு இருக்கு..இடி தாங்கும் வலிமையை
திமுகவினருக்கு ஆண்டவனே தாருமையா..என்று வேண்டிகொள்வோமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக