திங்கள், 7 ஜனவரி, 2013

தமிழகத்தில் 400 தியேட்டர்களில் விஸ்வரூபம் ரிலீஸாகும்

“படம் ரிலீஸ் ஆகட்டும்... வருவாங்க பாருங்க”கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்: வட இந்திய நிறுவனம் பல்டி! தமிழகத்தில் அன்டர் கன்ட்ரோல்!!

Viruvirupu
“படம் ரிலீஸ் ஆகட்டும்… வருவாங்க பாருங்க”
கமலில் விஸ்வரூபம் டி.டி.எச்.சில் வெளியாவதால், தியேட்டர் உரிமையாளர் சங்கம் தூக்கிய போர்க்கொடியையும் மீறி, தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆந்திராவில் பிரபல இயக்குனர் தாசரி நாரயண ராவ் விஸ்வரூபத்தை எடுத்து ரிலீஸ் செய்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் பல தியேட்டர்கள் உள்ளன.
ஆனால், வட இந்தியாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அங்கு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள கமல், “ஒரு மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் நிறுவனம் விஸ்வரூபம் படத்தை வட இந்தியாவில் ரிலீஸ் செய்வதாய் குடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியுள்ளது” என்கிறார். இதனால், தான் நினைத்த அளவுக்கு அங்கே தியேட்டர்கள் கிடைக்கிவில்லை எனவும், அதனால் வட இந்தியாவில் 11-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் இருக்காது என்றும் கூறினார்.

ஆனால் திட்டமிட்டபடி வட இந்தியாவிலும் 10-ம் தேதி இரவு விஸ்வரூபம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும் என்பதை உறுதி செய்தார்.
தென்னிந்தியாவின் தியேட்டர் வசூலைப் பார்த்துவிட்டு வட இந்திய தியேட்டர்களும் சற்று லேட்டானாலும் விஸ்வரூபத்தை திரையிட வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் கமல்ஹாசன்.
விஸ்வரூபம் படம் கோவையில் 36 தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அந்த மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். சென்னையில் சத்யம், தேவி, எஸ்கேப், ஐநாக்ஸ், பைலட், எம்.எம், பெரம்பூர் எஸ் 2, கொளத்தூர் கங்கா, பாடி சிவசக்தி, பாடி ராதா, பூந்தமல்லி சுந்தர், அனகாபுத்தூர் வெல்கோ, போரூர் கோபாலகிருஷ்ணா ஆகிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
ஏர்டெல் டிஜிட்டல் டி.வி., ரிலையன்ஸ் பிக் டி.வி., டாடாஸ்கை, வீடியோகான், டிஷ் டி.வி., சன் ஆகிய 6 டி.டி.எச்.களில் 10-ம் தேதி ஒளிபரப்பாகிறது.

கருத்துகள் இல்லை: