ஐதராபாத்:நிதி மோசடி வழக்கில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்
மோகன் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான, 143 கோடி ரூபாய்
மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஆந்திராவின்,
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏற்கனவே கைது
செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சி.பி.ஐ.,
தாக்கல் செய்த, முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், ஜெகன் மோகன் மீதான,
நிதி மோசடி வழக்குகள் குறித்து, மத்திய அமலாக்க பிரிவு, விசாரணையை
துவங்கியது.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த காங்., தலைவருமான, ராஜசேகர
ரெட்டி முதல்வராக இருந்தபோது, ராம்கி பர்மா சிட்டி (இந்தியா) நிறுவனம்,
மாநில அரசிடமிருந்து, சட்டத்துக்கு புறம்பாக ஆதாயம் அடைந்திருப்பதும், இந்த
விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பிருப்பதும், விசாரணையில்
தெரிந்தது. இந்த விவகாரத்தில், பெருமளவு நிதி மோசடி நடந்திருப்பதும்
கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராம்கி பர்மா சிட்டி நிறுவனத்தின், 135 ஏக்கர் நிலம்
மற்றும் வங்கி டிபாசிட் , ஜெகனுக்கு சொந்தமான, ஜகதி பள்ளிகேஷன்ஸ் பி.லிட்.,
நிறுவனத்தின் வங்கி டிபாசிட் மற்றும் ஜெகன் கூட்டாளிகளுக்குச் சொந்தமான
சொத்துக்கள் உட்பட, 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய
அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, பறிமுதல் செய்து, முடக்கி
வைத்தனர்.இந்த விவகாரம், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. யின் dinamalar,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக