மும்பையில் தொலைந்து போன
செல்போனின் உதவியால் மசூதி அசரத் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல்
வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.மும்பையில்
உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் நியாஸ் அகமத் ஹசான் ராசா (70) இவர் அதே
பகுதியில் இருக்கும் மசூதியில் அசரத்தாக இருக்கிறார். ஓய்வு நேரத்தில்
அப்பகுதி குழந்தைகளுக்கு அரேபிய மொழி கற்றுகொடுப்பார்.அவரிடம் சிறு
குழந்தைகள் பலர் அரேபிய மொழி கற்றுவந்தனர்.>இந்நிலையில்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு நியாஸ் அகமத் தனது செல்போனை தொலைத்துவிட்டார்.
தொலைந்து போன செல்போன் அப்பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் சிக்கியது, அந்த
நபர் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்க்கும் போதுதான் நியாஸின் சுயரூபம் தெரிந்துள்ளது.
நியாஸ் தன்னிடம் படிக்க வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு நில்லாமல் அந்த கேவலமான சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். இது சுமார் 1 மாதத்திற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
பிறருக்கு தெரியாமல் நடந்துவரும் இந்த குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர நினைத்த அந்த நபர் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் நியாஸ் அகமதை இந்திய சட்டம் 377 கீழ் கைது செய்துள்ளனர்.
70 வயது முதியவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதனை செல்போனில் படம் பிடித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த செல்போன் மட்டும் தொலைந்து போகாமல் இருந்திருந்தால் 70 வயது நியாஸின் அட்டூழியம் தெரியாமலே போயிருந்திருக்கும். http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக