ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பக்தி ஒரு மார்க்கெட்(டு)! அதற்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை

வியாபாரிகள் கொள்ளை அடிக் கின்றனர் என்று வீராவேசமாகப் பேசுவதுண்டு. விலைவாசிகள் விண்ணை முட்டுகின்றனவே என்று வியர்க்க வியர்க்க ஆர்ப்பாட்டம் நடைபெறுவதும் உண்டு.
ஆனால் பரலோகம் அனுப் புவதாகச் சொல்லப்படும் பக்தி _ கர்மவினை யிலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படும் கடவுள் பக்தி என்பது  மிகப் பெரிய வியாபாரமாக, முதலில்லா சந்தையாக கொடி கட்டிப் பறக்கிறதே - அதைப்பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை?
முதல் இல்லையா -_ மக்களின் முட் டாள்தனம் தானே மூலதனம் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லுவதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.
கோயில் கட்ட பணம் தேவை யில்லையா - அதுவும் ஒரு வகையில் முதல் தானே - முதலீடு தானே என்று முந்திரிக்கொட்டை போல எதிர்க் கேள்வி போடலாம்.
அந்த முதலீடு _ மூலதனம்கூட எந்தப் பார்ப்பான் வீட்டிலிருந்து வந்தது? நமது அரசர்கள் அண்டை நாட்டோடு போர் தொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுத்து,  கொள்ளை யடித்து வந்த பொருளையும், பொன் னையும் கொட்டி கோயில்களை உருவாக்கினர்.
இப்பொழுதோ கோயில் கட்டுவதற்கென்று மக்களிடம் சென்றால் கொட்டிக் கொடுக்கிறார்கள். போதும் போதாதற்கு அரசும் அள்ளிக் கொடுக்கிறது என்றாலும் அதுவும் மக்கள் பணம்தான். ஆனால் இவ்வளவும் செய்தபிறகு கும்பாபிஷேகத்தன்று குரங்கு போல் கோபுரத்தின் உச்சியில் குந்திக் கொண்டு மழைக் காலத்துத் தவளை போல புரியாத மொழியில் ஏதோ உளறியபின், - அந்தக் கோயிலின் அதிபதியாக ஆகிறவன் பார்ப்பான் தானே? கோயில் கட்ட ஒரு செங்கல்லை எடுத்துக் கொடுத்திருப் பானா? ஒரு சட்டி மண்ணைத் தூக்கிக் கொடுத்திருக்குமா அந்தக் கூட்டம்?

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலை யத்துறை ஒன்றை உருவாக்கி அரசின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தபிறகு புரோகிதச் சுரண்டல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. அது ஒரு பக்கம்;  கோயில் என்பது முழுக்க முழுக்க பச்சை வியாபாரத் தலமாகி விட்டதை மறுக்க முடியுமா?
நாம் சொன்னால் முகம் சுளிக்கலாம். சூனாமானாக் காரர்கள் குதர்க்கமாகத் தான் கேள்வி கேட்பார்கள் என்று சொல்லலாம்.
ஆனால் சங்கராச்சாரியார் சொன் னால் முகத்தை எங்கே கொண்டு போய் ஒளிய வைப்பார்களாம்?
மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற் கான அறிகுறிகள் காணப்படு கின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (Fashion) கருது கின்றனர். பக்தர்கள் பெரும்பாலோ ரிடம் வர்த்தக மனப்பான்மை காணப் படுகிறது.
_ இப்படி சொன்னவர் யார்? கறுப்புச் சட்டைக்காரர்களா? கடவுள் மறுப்பாளர்களா? அல்ல.. அல்ல.. சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான். 1976 மே மாதத்தில் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் தான் இப்படி திருவாய் மலர்ந்தருளினார்.
சொன்ன ஊரோ காஞ்சீபுரம், சொல்லப்பட்ட இடமோ அகில இந்திய இந்து மாநாடு என்பதை மறக்க வேண் டாம். இதற்கு ஆதாரம் தேட அய்யா யிரம் கல்தொலைவு பயணம் செய்ய வேண்டாம்.
ஆங்கிலப் புத்தாண்டு நாளான சனவரி முதல் தேதியன்று ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி செவுளில் அறைந்ததுபோல காணப்படுகிறது.
சென்னையில் திருப்பதி திருமலை மாதிரி கோவில்: பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்
சென்னையில் திருப்பதி திருமலா மாதிரி கோவில் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை சிந்தாதிரிப் பேட்டை உலகப்பன் தெரு ஜெயின் கோவில் அருகில் திருப்பதி திருமலா என்ற பெயரில் சீனிவாசப் பெருமாள் மற்றும் அலமேலு அம்மாள் சன்னதிகள் மாதிரி பிரமாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன.
புத்தாண்டையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சாமி சன்னதிகள் மற்றும் மாதிரி அமைப்புகள் திருப்பதி கோவிலில் உள்ளதுபோல் தத்ரூபமாக அமைக் கப்பட்டு இருந்தது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலரும், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளருமான என்.கண்ணையா, தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து புத்தாண்டு தரி சனம் செய்த வண்ணம் உள்ளனர். பக் தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கண்ணன் பட்டாச்சாரியார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கே. அனந்தகுமார் ரெட்டி, பி.கிருஷ்ணா ரெட்டி, எஸ்.காசி லிங்கம், ராகவேந்தர், சாய்ராம், பக்தர்கள் சாரி டபுள் டிரஸ்ட் தலைவர் எல்.ராஜேந் திரன், செயலாளர் ஸ்ரீகாந்த், பொருளாளர் பி.கே.நாராயணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராகவேந்தர், சாய்ராம் பக்தர்கள் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன் செய்து இருந்தார்.
(மாலை மலர் பக்கம் 2 1.1.2013)
இதுபற்றி நாம் கருத்துச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.  21ஆம் நூற்றாண்டில் பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதற்காகவே மொட்டை அடித்துக்  கொண்டு இருக்கிற ஆசாமி திருவாளர் சோ இராமசாமி என்ன சொல்லி இருக்கிறார்?
கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் சீனிவாச திருக் கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்றது பற்றியும் தங்கள் கருத்து?
பதில்: இவ்வளவு கட்டணம் செலுத் தினால், வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.
(துக்ளக் 23.4.2008 பக்கம் 17)
கட்டணம் செலுத்தினால் திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் பக்தர்கள் வீட்டுக்கே  வருவாராம். ஆக இதற்குள் இருப்பது பக்தியல்ல - கடவுள் சக்தியும் அல்ல - மாறாக பணம் தான் என்பது அம்மணமாக அம்பலப்பட்டு விட வில்லையா? சோ ராமசாமியே சாட்சியாக விட்ட பிறகு இந்தக் காட்சியெல்லாம் எம்மாத்திரம்!
கோயில் ஓரிடத்தில் உருவாகி இருந்தால் அடேயப்பா அந்த ஊருக்கும், கோயிலுக்கும் எவ்வளவு தலப் புராண மகிமைகளை எழுதிக் குவிப்பார்கள்!
அந்தத் தலப் புராணத்தையும் புத்தக மாக்கிக் காசாக்குவார்கள். பிரணவத்திற்கு ஈசன் பொருள் சொன்னபோது, அதில் மனத்தைச் செலுத்தாமல் தன்னருகில் ஆடும் மயிலின் அழகில் மனதைப் பறி கொடுத்தாள் உமையாகிய பார்வதி... இதனால் கோபமுற்ற சிவன் பார்வதியை மயிலாக மாற சாபமிட்டார். உமை மயிலாக மாறி ஈசனை பூஜித்ததால் இத்தலம் மயிலாப்பூர் என்றானது என்றெல்லாம் ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்கள் உண்டு. திருப்பதிக்கும் உண்டு.

அப்படி இருக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலை சென்னையில் ஒரு கிளைக் கோயிலாகக் கொண்டு வருவது _ சரவணா பவன் என்னும் உணவு வியாபாரக் கடை ஊருக்குஊர் உண்டாக்குவது போன்றதுதானே! அப்படி என்றால் தலபுராண அற்புதங்கள் எல்லாம் கப்சாதானே!
இதன் மூலம் பக்தர்களாகிய பொது மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு தந்திரம் _ வழிமுறை என்பதல்லாமல் வேறு என்ன?
திருப்பதி திருமலையான் கோயிலில் உண்டியல் வைத்து வசூல் செய்வதற்குக் கூட சாஸ்திர, புராண ரீதியாகக் காரணங் களையும் கற்பித்து வைத்துள்ளனர்.
பக்தியில் புத்தியைப் பறி கொடுக்கும் பக்தர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்கும் சக்தியைப் பறி கொடுக்கின்றனர். வெங் கடாசலபதி திருமணம் செய்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கினாராம். அதற்கான வட்டியை ஆண்டுதோறும் கட்டுவதற்காகத் தான் பக்தர்களிடம் உண்டியல் நிதி போடச் சொல்லிக் கேட் கிறார்; ஆண்டாண்டுக் கட்டியும் கடன் தீராததால் வட்டியோடு கட்டிக் கொண்டே இருக்கிறாராம்.
எப்படி இருக்கிறது? பக்தியின் பெயரால் மக்கள் பணத்தைச் சுரண்டுவதற் காகக் கடவுளையே கடனாளியாக்கி இருக்கிறார்கள். அப்படி தலப்புராணம் எழுதும்பொழுது எல்லா சக்தியும் வாய்ந்தவர் கடவுள் என்று சொல்லி வந்ததைக் கூட ஓரந் தள்ளிவிட்டு, தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்பதைக்கூட  காலில் போட்டு மிதித்து விட்டு, கையேந்தும் கடன்காரனாக்கி விட்டனரே! அவனைக் கடன் வாங்கும் பிச்சைக்காரனாக்கி விட்டார்களே!
கடவுள் அவர்களுக்கு சுரண்டும் ஒரு கருவிதானே _- கடவுளாவது கத்தரிக் காயாவது!
கடவுள் ஒரு வியாபாரப் பொருளான பிறகு - பக்தி வியாபாரிகள் பங்கு போட் டுக் கொள்ள மாட்டார்களா? கொள்ளை யடிக்க மாட்டார்களா? கடவுள்தான் ஒரு திடப் பொருளான ஜடமாயிற்றே _ தட்டிக் கேட்கவா போகிறது?
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் பணத்தை எண்ணும்போது காமிராவை ஏன் பொருத்துகிறார்கள்?
சபரிமலை உண்டியல் எண்ணியதில் முறைகேடு தணிக்கைத் துறை பகீர் அறிக்கை என்று வெளியிட்டது விடு தலை ஏடு அல்லவே? தினமலர்தானே! (20.2.2012 பக்கம் 13)
வியாபாரம் என்றால் அதில் கள்ள மார்க்கெட்டும்  இருக்கும்தானே? அந்தப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
எழுத ஆரம்பித்தால் ஏடு கொள் ளாது. நாமதாரி கடவுளான ஏழுமலை யானுக்கே நாமம் போடுவதை என்ன வென்று சொல்ல!
விழித்துக் கொண்டிருக்கும்போதே விளையாடும் குணம்படைத்த புரோகிதக் கூட்டம் குத்துக்கல்லாக உட்கார்ந்திருக் கும் கடவுள் என்று கற்பிக்கப்பட்ட ஜடத்துக்கா அஞ்சப் போகிறார்கள்?
ஆடிச் சலுகை என்று துணிக் கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதுண்டு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீகைலாச நாதர் கோயிலில் ஆடிக் கிருத்திகைக்கு நெய் விளக்குப் பூஜைக்குக் கட்டண சலுகையாம்!
வழக்கமான கட்டணம் 5 ரூபாய்க்குப் பதிலாக 3 ரூபாய் செலுத்தினால் போது மாம். இதுதவிர மாதந் தவறாமல் பக்தர் களுக்குப் பரிசுகள் வேறு உண்டாம். இந்த ஆண்டு தை முதல் அடுத்த ஆண்டு வரை பரிசுகள் தொடருமாம் (ஆதாரம்: தினத்தந்தி 13.8.1989 பக்கம் 10). பக்தி என்பது பச்சை வியாபாரம் என்பதற்கு இன்னும் பட்டியல் தேவையோ!
ஒன்று வாங்கினால் இன்னொன்று போனஸ் என்னும் ஏலக்கடையாகி விட் டதே கோயில்!
அப்படிதான் பக்தியை வளர்க் கிறார்களே _ அதில் ஒழுக்கமாவது தேறுகிறதா?
கருஞ்சட்டை சொன்னால் கடு கடுக்கும் முகங்கள் கிருபானந்தவாரியார் சொன்னால் கிளுகிளுக்க மாட்டார்களா? கொஞ்சம் காது கொடுக்க மாட்டார்களா?
கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ....!
பதில்: என் அனுபவத்துல சொல் றேன்... பக்தி அதிகமாகிக்க்கிட்டிருக்கு.. கோயிலுக்குப்போறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு! பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல் லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபா தான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு, மூன்று கோடியைத் தாண்டிடுது. பக்தி அதிகமாயிருக்கு.. ஆனால் ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு...!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக் குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ள லாமே?
பதில்: ஊ ஹூம்... அப்படியில்லை.. பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை.
- கிருபானந்தவாரியார்
(ஆனந்தவிகடன் 22.12.1991)
பக்தி ஒரு வியாபாரம், -பக்தியினால் ஒழுக்கம் வளர்வதில்லை என்று திரா விடர் கழகத்தினர் சொன்னால் எங்கள் மனம் புண்படுகிறது என்று ஒப்பாரி வைக்கும் மாய்மாலப் பேர்வழிகள் இவற்றிற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பக்தர்களுக்கும் ஆறாவது அறிவு _- பகுத்தறிவு இருக்கத்தான் செய்கிறது. பயன்படுத்துங்கள் _ இல்லாவிட்டால் அது துருப்பிடித்துவிடும் _ ஏமாளிகள் ஏய்த்துப் பிழைப்பார்கள் -_ எச்சரிக்கை!
- மின்சாரம் viduthalai.in/

கருத்துகள் இல்லை: