வெள்ளி, 11 ஜனவரி, 2013

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

புதுடில்லி : சினிமா உலகின் கனவு விருதாகவும் உயரிய விருதாகவும் திகழும் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரை செய்யப்பட்டுள்ள 36 விருதுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள 4 படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 85 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற உள்ளன. இவ்விழாவில் விருதுகள் முறையாக அறிவிக்கப்பட உள்ளன.

பட்டியலில் இந்திய பாடகி:
ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்திற்காக இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப்பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய "பைஸ் லுல்லாபை" என்ற தமிழ் பாடலும் சிறந்த பாடல் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தான் எழுதிய பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்‌யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, பாடல் எழுதுவது எளிதான ஒன்றும் எனவும், ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் தான் எழுதி இருப்பதாவும் தெரிவித்துள்ளார். விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‌ஜெயஸ்ரீயின் குறும் பாடல் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் எளிய வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது டுவிட்டர் பகுதியில் பாம்பே ஜெயஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்கள் :


2013ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களும் இந்தியாவுடன் தொடர்புடையன ஆகும். ஆங் லீ இயக்கிய ' லைஃப் ஆஃப் பை' மற்றும் கேத்ரின் பிக்லோ இயக்கிய 'ஜீரோ டார்க் தர்ட்டி' ஆகிய இடமும் இந்தியாவில் படமாக்கப்பட்டவைகளாகும். ஜீரோ டார்க் தர்ட்டி படம் சண்டிகரின் கூட்ட ‌நெரிசல் நிறைந்த மார்கெட் ஒன்றிலும், லைஃப் ஆஃப் பை படம் புதுச்சேரியிலும் படமாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எடுக்கப்பட்ட லைஃப் ஆஃப் பை படம் சிறந்த பாடல், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். ஜீரோ டார்க் தர்ட்டி படம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

அம்பானி படத்திற்கு 12 விருது :


ஆஸ்கார் விருதுக்காக இந்த ஆண்டு அதிக விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட படம் ஸ்டீபன் ஸ்பைல்பெர்க் இயக்கிய 'லிங்கன்' படமாகும். சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை என இப்படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்-ட்ரீம் வொர்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இயக்கப்பட்டதாகும். இது குறித்து தெரிவித்துள்ள அனில் அம்பானி, ஸ்டீபன் ஸ்பைல்பெர்க் மற்றும் ஸ்டசி ஸ்னிடருடன் பணியாற்றியதை தான் பெருமையாக கருதுவதாகவும், அதிக அளவிலான விருதுகளுக்கு லிங்கன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட இந்தியர்கள்:


லைஃப் ஆஃப் பை படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீயும், அனில் அம்பானியின் திரைப்பட நிறுவனத்தின் லிங்கன் படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அனுபம் கர் நடித்த திகில் படமான சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 1982 ம் ஆண்டு காந்தி படத்திற்காக பான ஆதித்யாவும், 1992ம் ஆண்டு சத்யஜித் ரேவும், 2008ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானும் இதுவரை ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை: