Viruvirupu
தாராபுரம் வியாபாரி ராமலிங்கம், “பறிமுதல் செய்யப்பட்ட பில்கள் அனைத்தும் சொந்த வருவாயில் வாங்கியவை. நான் யாருடைய பினாமியும் அல்ல” என்பதிலேயே இன்னமும் உள்ளார். ஆனால், “கொப்பரை, நிலக்கடலை மற்றும் சாக்கு வியாபாரத்திலும் அந்த பணம் வரவில்லை” என்றும் சொல்கிறார்.
இந்த பணபரிமாற்ற விவகாரத்தில் பிரேசில் நபர் ஒருவருக்கும், ராமலிங்கத்துக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது ஒரு டைரியை கைப்பற்றினர்.
அதில் பிரேசில் நபரின் பெயர், முகவரி இடம்பெற்றுள்ளது. எனவே, பிரேசில் நபரிடம் விசாரணை நடத்த இன்டர்போல் உதவியை நாட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. பிரேசில் நபரின் பெயர் டேனியல்.
பிரேசில் நபர், தாராபுரத்தில் உள்ள இவரை பினாமியாக வைத்திருக்க சான்ஸ் இல்லை. இவர் வேறு யாரோ இந்தியாவில் உள்ள நபரின் பினாமியாக இருக்கலாம் என்பதும், பிரேசில் நபரிடம் விசாரணை நடத்தினால் அந்த விஷயம் வெளிப்படும் என்பதும்தான், சி.பி.ஐ.-யின் தற்போதைய ரூட் என்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக