மத்திய இணை அமைச்சர் நாரா யணசாமி,
டில்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை அரசிதழில்
வெளியிடுவதற்கு தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், கரு நாடகா மட்டும் வழக்கு விசாரணை முடியும் வரை வெளியிடக்கூடாது என
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை
மத்திய நீர்வளத்துறை கேட்டு வருகிறது. அவர்களின் கருத் துக்கு பிறகு
அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதி மன்றம் விதித்துள்ள
கெடுவுக்குள் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான
சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்துறை
அமைச்சர் தலைமையில் நடந்த டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்கள் கூட்டத் தில்
இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
மேஜர் வயதை 18 இல் இருந்து 14 அல்லது 16ஆக
குறைக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது. பாலி யல் விவகாரத்தில் மரண தண்டனை
வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித் தன.
ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஆயுள்
தண்டனை விதிக்க சட்ட வரைவு மசோதா, நாடாளுமன்ற கூட் டத் தொடரில்
கொண்டுவரப்படும். மேலும் வழக்கு விசாரணையை ஒரு மாதத்தில் முடித்து தீர்ப்பு
வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக் கப்படும்.
சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னையில்
பட்டினிப் போராட் டம் இருக்கப் போவதாக திரைப்படத் துறையினர் அறிவித்துள்ளது
சரியல்ல. போராட்டத்தை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். நாடாளு மன்ற
தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித் துள்ளது அவர்களது
சொந்த விஷயம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. தமிழகத்தை பொறுத்தவரை காங்
கிரஸ், திமுக கூட்டணி பலமான கூட்டணியாக உறுதியான நிலையில் உள்ளது.
-இவ்வாறு நாராயணசாமி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக