வெள்ளி, 2 நவம்பர், 2012

சந்தேகத்தில் மகளைக் கொன்ற பெற்றோர்!



Parents kill teenage daughter in acid attack in Kashmir

Parents kill daughter by pouring acid on her face after being caught talking to a boy

பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சொந்த மகளை திராவகம் ஊற்றிக் கொலை செய்த தாய், தந்தையரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கொட்லி மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் உயிழந்த சிறுமியின் வயது வெறும் 15 ஆகும்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவர்களை அச்சிறுமி பார்த்துக்கொண்டிருந்துள்ளமையை பெற்றோர் கண்டுள்ளனர்.
எனவே அச்சிறுமி குறித்த இளைஞர்களில் ஒருவருடன் காதல் தொடர்பில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் மீது திராவகத்தையும் ஊற்றியுள்ளனர். சிறுமி வலியால் துடிப்பதை கண்டும் அவரது பெற்றோர் அக்கறையின்றி இருந்துள்ளதுடன் அடுத்த நாளே சிறுமியை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிறுமி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். சிறுமியின் மூத்த சகோதரியே இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த வருடத்தில் மாத்திரம் 943 பேர் ‘கௌரவக் கொலை’ என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: