வியாழன், 1 நவம்பர், 2012

DMK MLA க்கள் வெளியேற்றம்- சேது' குறித்துப் பேச தடை


சென்னை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர முயன்ற திமுக உறுப்பினர்களுக்கு சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை அவைக் காவலர்களை வைத்து சபாநாயகர் தனபால் வெளியேற்ற உத்தரவிட்டார்.
சட்டசபையில் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர் திமுக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு அனுமதி தர சபாநாயகர் தனபால் மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து அனைவரையும் வெளியேற்றினர். இதைக் கண்டித்து அவைக்கு வெளியே திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் பங்கேற்கத் தடை

இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் நாளைய கூட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஒரே கூட்டத்தொடரில் 2 முறை திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 முறை வெளியேற்றப்பட்டோர் மீது சட்டமன்ற விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: