புதன், 31 அக்டோபர், 2012

கேரளா கழிவுகள் தமிழகத்திற்கு வந்தது அம்பலம்

கேரளா மாநிலம், திருச்சூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம், தமிழகத்தில், எரிபொருள் தயாரிக்க திட்டம் வகுத்த, நாமக்கல்லை சேர்ந்தவர், செய்த நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
சேலம் மாநகராட்சியில், சேகரிக்கப்படும் குப்பைகள், செட்டிசாவடியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்,எரிபொருளாகவும், உரமாகவும், பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்களாகவும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.நாள்தோறும், 300 டன் குப்பை, செட்டிசாவடியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தை சேர்ந்த ஹேங்கர் பயோடெக் எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம், கரும்பு, வாழை, பூந்தோட்டம் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில், தினமும் மாநகராட்சி கழிவுகள் மூலம், 70 டன் பயிர் உரம் தயாரிக்கப்படுகிறது.
 
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

Enrum anbudan கேரளா முழுமையும் மாலின்ய (சாக்கடை) பிரச்சினை இருக்கின்றது, அவர்கள் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் திருவனந்தபுரம் வாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள், அவர்களுக்கு இடப்பிரச்சினை, கோர்ட் ஆணையிட்டும் அவர்களால் சுதிகரிப்புநிலயம் கொண்டுவர முடியவில்லை ஏனென்றால் அந்த ஏரியாவில் உள்ள ஒரு பஞ்சாயத்து தலைவி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் ஆனால் நம் ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் என்ன செய்கின்றார்கள், எல்லோரும் காசுக்கு சோரம் போனவர்கள். காசுக்காக எதையும் தினக்கூடியவர்கல். இன்னும் வரும் வந்து கொண்டே இருக்கும்... நம்மஊர் கவ்வோதிகள் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்க திராணி அற்றவர்கள், சுயநல வாசிகள், தமிழன் தமிழன் என்றே பேசி உரை அடித்து உஅல்யில் போடக்குடியவர்கள். நம்நாடு என்ற நிலையில் இருந்து நம் குடும்பம், நம் சாதி, நம் மதம் என்று மாறிய மாறிக்கொண்டிருக்கின்ற சுயனலகிருமிகள். இம்மாதிரி பாவிகள் திருந்தினால் அன்றி நம் தமிழ் நாட்டுக்கு விடிவு இல்லை.

அதே கழிவுகளின் ஒரு பகுதியை கொண்டு, ஆர்.டி.எஃப்., எரிபொருட்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 80 டன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுக்கு முன், நாமக்கல்லை சேர்ந்த பாஸ்கரன், என்பவர் நடத்தி வந்த, "ஸ்பார்க் எனர்ஜி' என்ற நிறுவனத்துடன், குஜராத்தை சேர்ந்த, "ஹேங்கர் பயோடெக் எனர்ஜிஸ்' நிறுவனம், எரிபொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்தது.

எரிபொருட்களுக்குண்டான தொகையை, குஜராத் நிறுவனத்துக்கு முறையாக ,முதலில் செலுத்தி வந்த பாஸ்கரன், சில மாதங்களில் காலதாமதம் செய்யத் துவங்கினார்.அவர், 8,000 டன்னுக்கு மேல் எரிபொருள் பெற்றதற்கான தொகையை, குஜராத் நிறுவனத்துக்கு செலுத்தவில்லை. அதனால், குஜராத் நிறுவனம், பாஸ்கரனுடன், போட்ட ஒப்பந்தத்தை,சில மாதங்களுக்கு முன், ரத்து செய்தது. எரிபொருட்கள் மூலம் கணிசமான வருவாயை பார்த்து வந்த பாஸ்கரனுக்கு, எரிபொருள் கிடைக்காததால் வருமானம் பாதித்தது.

உள்ளூரில், கழிவுகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டால், சிக்கல் ஏற்படும் என்று கருதிய பாஸ்கரன், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கழிவுகளை கொண்டு வந்து, அதன் மூலம் எரிபொருட்களை தயாரிக்க திட்டம் வகுத்தார்.கடந்த அக்., 27 ம் தேதி, திருச்சூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை ஏற்றி கொண்டு, இரு லாரிகள், தமிழக எல்லை பகுதிக்கு வந்துள்ளது. சந்தேகம் அடைந்த, கோவை, ம.தி.மு.க., வினர் லாரியை வழி மறைத்து, ஆவணங்களை வாங்கி பார்த்துள்ளனர்.

கழிவுகளை மேலாண்மை செய்ய (வேஸ்ட் பிராசசிங் யூனிட்) சேலத்திலுள்ள, "ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்துக்கு, திருச்சூர் மாநகராட்சி கழிவுகளை அனுப்ப, நாமக்கல்லில் உள்ள, "ஸ்பார்க் எனர்ஜி' என்ற நிறுவனத்திற்கு, தரப்பட்ட சான்றுகளை, லாரி டிரைவர்கள் காட்டியுள்ளனர். அதனைப் பரிசீலித்த போலீசார், ஆவணங்கள் சரியாக இருப்பதாக கூறி, லாரியை விடுவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, ம.தி.மு.க., மட்ட செயலளர் ஈஸ்வரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தார்.

உடனே, வாரிய அதிகாரிகள், சேலத்தில் உள்ள குஜராத்தை சேர்ந்த, ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் நிறுவனத்திடம் விசாரித்துள்ளனர். இதில், அந்த ஆவணம், பொய் என்று தெரிய வந்துள்ளது. பிறகு, வாரிய அதிகாரிகள் பாஸ்கரனை விசாரிக்க முயன்றபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.பாஸ்கரன் போலியாக ஆவணங்களை தயார் செய்து மோசடியில் இறங்கிய சம்பவம் குறித்து, சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டுள்ளதால், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

போலி லெட்டர் பேடு பயன்படுத்தல்:மாசுக்கட்டுப்பாட்டுவாரிய சேலம் மண்டல பொறியாளர் ராஜசேகர் கூறியதாவது:
இந்த பிரச்னை தொடர்பாக தகவல் வந்ததும், செட்டிசாவடிக்கு சென்று, ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டோம். இதில், பாஸ்கரன் என்பவர் போலி லெட்டர் பேடு மூலம், கேரளாவில் இருந்து கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வர முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. ஹேங்கர் நிறுவனம், இதுகுறித்து போலீசில் புகார் செய்வதாக தெரிவித்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:நாமக்கல்லை சேர்ந்த பாஸ்கரன், எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, எரி பொருட்களை பெற்று சென்றார். ஆனால், பல மாதங்களாக, பணம் தராமல் இழுத்தடித்ததால், அவருடன் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.எங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி, போலி லெட்டர் பேடு தயார் செய்து, இறைச்சி கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பாக, மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லையில் கண்காணிப்பு தொடருமா?கேரளாவில் இருந்து, லாரிகள் மூலம் டன் கணக்கில் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கழிவுகள், தமிழக எல்லை பகுதிக்குள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது.பணம் பார்க்கும் ஆசையில், லாரி உரிமையாளர்கள் அவற்றை கொண்டு வந்து இறக்குகின்றனர். ஒரு சிலர் கழிவுகள் மூலம் உரம் மற்றும் எரி பொருள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, பணம் பார்க்கும் ஆசையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- நமது நிருபர் dinamalar,com

கருத்துகள் இல்லை: