புதன், 31 அக்டோபர், 2012

அன்பழகனை அழைத்து செல்வதில் மோதல்?

கலைஞர் அய்யா இந்த ரித்தீஷுக்கு ஏன்தான் பதவி கொடுத்தீர்கள் நியாயமான ஒரு காரணமாவது சொல்லுங்கள் திமுகவின் அடிப்படை தொண்டன் குமுறுகிறான் அய்யா 

மதுரையில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனை காரில் அழைத்து செல்வது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட செயலர் சுப.தங்கவேலன் மற்றும் எம்.பி., ரித்தீஷ் தரப்பினர் இடையே, மோதல் ஏற்பட்டது. இதில், ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க, நேற்று காலை, அன்பழகன் மதுரை வந்தார். அவரை பசும்பொன்னுக்கு அழைத்துச் செல்ல கட்சி நிர்வாகிகள் குவிந்தனர்.
அங்கு வந்த ரித்தீஷ் எம்.பி., தனது ஆதரவாளர்களிடம், "அன்பழகனை அழைத்துச் செல்ல, எனது காரை கொண்டு வாங்க' என்றார். இதற்கு தங்கவேலன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, "மாவட்ட செயலர் என்ற முறையில், நான்தான் அழைத்துச் செல்வேன்' என்றார்.    எந்த அரசியல் தொடர்பு ,அனுபவம் இல்லாத ஒரு புது பணக்காரன் தி.மு.க வில் கோலோச்ச முடியுமா .... ரித்தீஷ் க்கு யார் கொடுத்த தைரியம் ..... தி.மு.க வின் உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும் ...... திரு .மரியா வும் தான் ....தலைவரை போல் இல்லாமல் உண்மையை உணர வேண்டும் ..... தினமலர் பிரசுரித்ததை விடுங்கள் உண்மை என்ன உணருங்கள்
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது:மதுரை நகர் செயலர் தளபதி, துணை செயலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். அப்போது, மஞ்சூர் ஊராட்சி தலைவரும், தங்கவேலுவின் ஆதரவாளருமான தங்கராஜை, ஒரு நபர் அரிவாளால் வெட்டியதில், கையில் காயம் ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் உள்ளிட்டோர், மோதலை கட்டுப்படுத்தினர். கோஷ்டி மோதலால் அதிர்ச்சியடைந்த அன்பழகன், "பாதுகாப்பு' கருதி, "இரண்டு பேர் காரும் வேண்டாம்ய்யா' என்று நொந்து, சாத்தூர் ராமச்சந்திரனின் காரில், பசும்பொன் சென்றார். காயமடைந்த தங்கராஜ், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.ரித்தீஷ், குமரக்குறிச்சி நாகராஜன், திருப்புவனம் சண்முகம் மற்றும் சிலர் மீது, கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ், தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு, அன்பழகன் வருவதற்கு முன், ரித்தீஷ் எம்.பி., தலைமையில், முன்னாள் எம்.பி., பவானி, முன்னாள் எம்.எல்.ஏ.,கள் முருகவேல், சத்தியமூர்த்தி ஆகியோர் மலர் வளையத்துடன், நினைவிடம் வந்து, இடம் பிடித்துக் கொண்டனர்.
அன்பழகனை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., செயலர் தங்கவேலன் அழைத்துவந்தார். நினைவிடத்தை மறைத்து நின்று கொண்டிருந்த, ரித்தீஷை, தங்கவேலன் ஆதரவாளர்கள் பின்னோக்கி தள்ளினர். தங்கவேலன் ஆதரவாளர்கள் கொண்டுவந்த மலர் வளையத்தை, ரித்தீஷ் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.

இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு தொடர்ந்ததால், "அப்செட்' ஆன அன்பழகன், வேகமாய் கிளம்பிச் சென்றார். பின் அன்பழகன், அருப்புக்கோட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் மில்லுக்கு வந்தார். சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி.,யும் உடன் வந்தனர். வாகனங்களை நிறுத்துவதில், பிரச்னை ஏற்பட்டது. சுப. தங்கவேலன் ஆதரவாளர்களையும், அவர்களின் கார்களையும் அடித்து நொறுக்கினர். இதில் வல்லரசு, முத்துராமலிங்கம், சண்முகவேல், திலகர், உத்தரகுமார், நாகரத்தினம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை  dinamalar.com

கருத்துகள் இல்லை: