திங்கள், 29 அக்டோபர், 2012

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படாததாலேயே ஜெய்பால் நீக்கம்: கெஜ்ரிவால்

டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படாததாலேயே பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜெய்ப்பால் ரெட்டி மாற்றப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. இவர் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். வீரப்ப மொய்லிக்கு பெட்ரோலியத் துறை கொடுக்கப்பட்டது.
அறக்கட்டளை முறைகேடு புகாரில் சிக்கிய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் நேர்மையான மனிதராக கருதப்படும் ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலிய துறையை பறித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் காரணம் http://tamil.oneindia.in/


கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு தயாரிக்கும் பணியில் விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு கடுமையான நிலையை மேற்கொண்டு வந்தது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உரிய லாபி மூலமாக ஜெய்பால் ரெட்டி துறையை பறித்திருப்பதாகக் கூறப்படுகிறது என்பது சமூக ஆர்வலர் கெஜ்ரிவாலின் புகார்.
இதேபோல் ராகுலின் தலையீட்டால் தகுதியில்லாத இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்பதும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு.

கருத்துகள் இல்லை: