திங்கள், 29 அக்டோபர், 2012

விஜயகாந்த் உள்ளிட்ட 5 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெ.வை சந்திக்க நேரம் கோரி அதிரடி மனு

சென்னை: தேமுதிகவின் 4 எம்.எல்.ஏக்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாக மாறிவிட்டனர். இதற்கு "கவுண்ட்டர்" கொடுக்கும் வகையில் விஜயகாந்த் தாம் உட்பட 5 தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கோரி மனு கொடுத்திருக்கின்றனர்.
தேமுதிகவின் சுந்தரராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்து சந்தித்து பேசி அதிரடியைக் கிளப்பினர். அனைவருமே தங்களது தொகுதி பிரச்சனைக்காகவே முதல்வரை சந்தித்ததா கிளிபிள்ளை போல் சொல்லி வந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய விஜய்காந்த், ஜெயலலிதா நடத்தும் நாடகத்தை நான் முடித்து வைக்கிறேன் என்று கூறியிருந்தார். http://tamil.oneindia.in/

இதனிடையே திடீரென விஜயகாந்த், சாந்தி, அறிவுச்செல்வன், முருகேசன், செந்தில்குமார் உள்ளிட்ட 5 தேமுதிக எம்.எல்.ஏக்களும் சபாநாயகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அம்மனுவில் தாங்கள் அனைவரும் தங்களது தொகுதி பிரச்சனை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
தமிழக முதல்வரை சந்திக்க ஜெயலலிதாவின் அலுவலகத்தில்தானே மனு கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, சட்டசபைக் கூட்டம் நடைபெறுவதால் சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர் தேமுதிக எம்.எல்.ஏக்கள்.ா
அவர்கள் ஆரம்பித்து வைத்ததை நான் முடித்து வைக்கிறேன் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இப்போது அவர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதைப் பார்க்கும்போது இதுதான் அவர் சொன்ன 'கவுண்ட்டர் ' அ ட்டாக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை ஜெயலலிதாவும் அதிரடியாக நேரம் ஒதுக்கிவிட்டால் விஜயகாந்த் சந்திப்பாரா? என்பது தெரியவில்லை

கருத்துகள் இல்லை: