வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜெயேந்திரர் மீது வீரமணி அவதுறு வழக்கு


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் த. வீரசேகரன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளனர். (சென்னை - 16.8.2012)
  • அக்டோபர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு
  • செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு
சென்னை, ஆக.16-  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையரும் தம்பியும் தம்மைச் சந்தித்ததாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாக தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.

ஜெயேந்திர சரஸ்வதி மீதும், திருச்சி பதிப்பு தினமலர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
திருச்சி பதிப்புத் தினமலரில் (10.5.2012) கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஆன்மிகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தமிழகத்திலும் ஆன்மிகம் சிறப்பாக உள்ளது. ஆன்மிக வளர்ச்சிக்கு அரசு முழு அளவில் ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால் திமுக தலைவர் கருணா நிதியும், தி.க. தலைவர் வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராகவே செயல் பட்டு வருகின்றனர். பேசி வரு கின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் 3 முறை என்னை வந்து சந்தித்துள்ளார்.
வீரமணியின் மனைவியும், மத்திய அமைச்சர் அழகிரி மனைவியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள் ளனர். வீரமணியின் தம்பியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள் ளார். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராக செயல்பட் டாலும், அவர்கள் குடும்பத்தினர், ஆன்மிகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று தினமலரில் செய்தி வெளி வந்துள்ளது.
இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது. எனது வாழ்விணையர் இயக்கக் கொள்கையில், பகுத்தறிவு செயல்பாட்டில் மிகவும் தீவிர உணர்வு கொண்டவர் - கடைபிடிக்கக் கூடியவர்!
இந்த நிலையில் எனது வாழ் விணையர் காஞ்சிபுரம் சங்கராச் சாரியாரைச் சந்தித்தார் என்று சொல்லுவது  கழகத் தோழர்கள் மத்தி யிலும் ,பொது மக்கள் மத்தியிலும் எங்கள்மீது அவதூறை, கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இதுகுறித்து தினமலர் ஏட்டுக் கும், சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி அவர்களுக்கும் வழக் குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது. சங்கராச்சாரியார் சொன் னதைத்தான் நாங்கள் வெளியிட் டோம். எங்களுக்கு வேறு நோக்கம் இல்லை என்று தினமலர் தரப்பி லிருந்து பதில் வந்தது. சங்கராச் சாரியாரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.
இந்த நிலையில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மற்றும் திருச்சி பதிப்பு தினமலர் மீதும், எங்களது இரண்டாவது மகனும், திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாள ருமான வீ.அன்புராஜ் சென்னை மெட்ரோபாலிட்டன் முதன்மை நீதிபதி முன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள இருவரும் நேரில் ஆஜராக வேண்டு மென்று ஆணை பிறப்பித்துள்ளார் நீதிபதி.
விமர்சனம் என்பது வேறு உண்மைக்கு மாறாக அவதூறாகச் சொல்லுவது என்பது வேறு. நாங்கள் விமர்சனங்களை சந்திக்கத் தயாராகவே உள்ளோம் அதே நேரத்தில் அவதூறு செய்தால் அதனை சட்ட ரீதியாகச் சந்திப்போம். இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் இபிகோ 500 மற்றும் 501 பிரிவின்படி இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் என் தம்பியும் சங்க ராச்சாரியாரைச் சந்தித்தாராம். எனக்குத் தம்பியே கிடையாது. எங்கள் குடும்பத்தில் நான்தான் கடைசிப் பிள்ளை!
தினமலரைப் பொறுத்தவரை சங்க ராச்சாரியார் சொன்னதைத் தான் நாங்கள் அப்படியே வெளியிட்டோம். வேறு நோக்கம் இல்லை என்று பதில் சொன் னாலும்கூட  செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மன்னிப்புக் கோரினாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

கருத்துகள் இல்லை: