திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பெண்களுக்கான தனி Segregation நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா

 ரியாத்:சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.
குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத காரணத்தால், படித்த பெண்கள் கூட வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள சவுதி அரசு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன.
இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் காசு கையில் இருப்பதால் இந்த மாதிரி விசித்தர யோசனைகள் வருகின்றது . .... இவர்களிடம் பெட்ரோல் இல்லாத போது எல்லா மக்களுமே பாலைவனத்தில் காட்டுமிராண்டிகளை போல் இருந்தார்கள். சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: