வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவு


மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவாக உள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணக்க தொடர் பாளர் டாக்டர் லட்சுமிதர் மிஸ்ரா தெரிவித்தார்.
சர்வதேச நீதிக்குழு (அய் ஜேஎம்) சர்வதேச நீதிக்குழுவின் சார்பில் கொத்தடிமை குற்றத் திற்கு எதிரான பிரசாரம் குறித்த விழிப்புணர்வு விவாதம் சென் னையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற சர்வதேச நீதிக்குழுவின் சென்னை மண்டல இயக்குநர் ஆண்டி கிரிபித்ஸ், வாரணாசியில் உள்ள காத்தியன் கல்வி அறக்கட் டளை நிறுவனத்தின் டாக்டர் ஜூயல், தேசிய மனித உரிமை கள் ஆணையத்தின் இணக்க தொடர்பாளர் டாக்டர் லட்சு மிதர் மிஸ்ரா, புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக போராசிரியர் ரவிசிறீவத்சவா ஆகியோர் பங் கேற்றனர்.
பின்னர் அவர்கள் செய்தியா ளர்களிடம் பேசியதாவது:
கொத்தடிமை முறை நாட் டில் அதிக அளவில் உள்ளது. அரிசி ஆலை, செங்கல் சூளை, கல்குவாரி உட்பட பல்வேறு தொழில்களில் லட்சக்கணக் கானோர் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். இவர்கள் வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் உழைக் கின்றனர். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டுமல்ல, உழைப் பதற்கு ஏற்ற உணவும் தருவ தில்லை. கேட்பவர்களுக்கு அடி உதை என சித்ரவதைகள் நடக்கும். உயிரிழப்புகள் வெளி யில் வருவதில்லை.
கொத்தடிமை தொழிலில் இருப்பவர்களின் புள்ளி விவ ரங்கள் சரிவர கிடைப்பதில்லை. காரணம் அவர்களை அடையா ளம் காண்பதும், அவர்கள் தங் களை அடையாளப்படுத்திக் கொள்வதும் குறைவாக இருக் கிறது.
கிடைத்த விவரங்களின்படி கொத்தடிமைகளாக இருப்ப வர்களில் 86.6 சதவீதம் பேர் எஸ்சி/எஸ்டி இனத்தவர்கள் தான். இவர்களில் 15 சதவீதம் பேர் குழந்தை தொழிலாளர்கள். மொத்தம் 75 சதவீதத்தினர் குடும்பத்துடன் கொத்தடிமை களாக உள்ளனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவாக உள்ளது.
அதேநேரத்தில் பொருளா தாரத்தில் உயர்ந்த, சமூக வேறுபாடுகள் குறைவாக உள்ள தமிழகத்திலும் கொத்தடிமை முறை கணிசமாக இருப்பதை மறுப்பதிற்கில்லை. இதுவரை அய்ஜேஎம் மூலமாக 140 வழக் குகளில் 4000 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட் டுள்ளனர்.
கொத்தடிமையாக்கும் முதலாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக் கும். தமிழ்நாட்டிலும் அரிசி ஆலை முதலாளிக்கு இப்படி தண்டனை கிடைத்தது குறிப் பிடத்தக்கது. மக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத் தினால் கொத்தடிமை முறை குறை யும். - இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: