வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: CAG குற்றச்சாட்டு

 டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா நிறுவனமும் தென் ஆப்பிரிக்காவின் சசோல் நிறுவனமும் இணைந்து தொடங்கிய ஸ்டேடர்ஜி எனர்ஜி டெக் சிஸ்டம்ஸ், அனில் அகர்வாலின் நிறுவனங்கள், அதானி குரூப், ஆர்சலர் மிட்டல், எஸ்ஸார் குரூப், லான்கோ ஆகிய நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்துள்ளன.
சுமார் 44 பில்லியன் டன் நிலக்கரி கொண்ட சுரங்கங்களை ஏலமே விடாமல் மிக மிகக் குறைவான விலைக்கு இவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கித் தந்துள்ளது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: