திங்கள், 2 ஜூலை, 2012

Police அதிகாரிகளை எதிர்த்த சமூக சேவகர் படுகொலை

திருவண்ணாமலை நகரில் வசிப்பவர் ராஜ்மோகன்சந்திரா. 45 வயதான இவர் காவல்துறை அதிகாரிகள் பலர் மீது ஆதாரங்களோடு வழக்கு தொடுத்து உயர்நீதி மன்றத்தில் நடத்தி வருபவர். காவல்துறையால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டு வந்தார். கடந்த 8 ஆண்டுகளில் இவர் தொடுத்த வழக்குகள் பல. இதனால் பல காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வுகள் கூட தடைபட்டன. இதனால் இவருக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தன. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பால் வாங்க தனது டிவிஎஸ் எவி வண்டியில் சென்றவர் பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டு யிருந்தபோது பெங்களுரூ சாலையில் உள்ள சிம்மதீர்த்தம் அருகே சிலர் அவர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி கொன்றுள்ளனர். முகம், கழுத்து, கையில் வெட்டப்பட்டு சம்பவ இடத் திலேயே இறந்தும் போயுள்ளார். பொதுமக்கள் மூலம் இத்தகவல் காவல்துறைக்கு சென்று எஸ்.பி ரம்யபாரதி சம்பவயிடத்தை பார்வையிட்டார்.காலையில் கொடூரமாக நடந்த இந்த கொலை திருவண்ணாமலை பொதுமக்களை அதிர வைத்து ள்ளது

கருத்துகள் இல்லை: