வியாழன், 5 ஜூலை, 2012

ஜெயலலிதா:சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலை

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை ஏன் சிறையில்
 அடைக்கவில்லை : ஜெயலலிதா விளக்கம் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினரை கைது செய்து சிறையில் அடைக்காமல் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில்,   ‘’சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் தி.மு.க.,வினர் ஜாமீன் கேட்கக்கூடாது என தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது.


நில அபகரிப்பு புகார்கள் தி.மு.க., ஆட்சி காலத்திலேயே கொடுக்கப்பட்டன. ஆனால் நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் மீது அப்போதைய தி.மு.க., அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. < தேர்தல் வாக்குறுதிப்படி, அ.தி.மு.க, ஆட்சி அமைந்ததும் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். தி.மு.க., மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை திசை திருப்பவும், தி.மு.க., மீது கூறப்படும் ஊழல்புகார்களை மறைக்கவுமே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலையாக அமையும் என்பதால் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டேன்’’ என கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: