புதன், 4 ஜூலை, 2012

மாவட்ட வாரியாக கைதானோர் விபரம்

 District Wise Arrest List Dmk Cadre மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைது?... இதோ பட்டியல்!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைதாகியுள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக தரப்பில் தரப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ள விவரம்...
திண்டுக்கல்லில் 25,000 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர்.
தஞ்சாவூரில் 15,000 பேர் கைது
அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர்.
திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையி்ல 10,000 பேர் கைது
மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த போராட்டத்தில் மு.க.அழகிரி மட்டும் பங்கேற்கவில்லை.
சென்னையில் மட்டும் 50,000 பேர் கைது
தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.
மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும்.

கருத்துகள் இல்லை: