வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment – FDI) திட்டம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள நிலையில், அதிகம் விளம்பரமின்றி மற்றொரு துறையில் FDI அனுமதிக்கப்படவுள்ளது. இந்தியாவின் தனியார் விமான சேவை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டது.
இதன் அர்த்தம், இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீதம்வரை வாங்க முடியும். “அமைச்சு (விமானப் போக்குவரத்து) இதுபற்றிய முடிவை தற்போது எடுத்துவிட்டது. ஆரம்பத்தில் 24 சதவீதம்வரை அனுமதிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் 26 சதவீதம்வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அமைச்சின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய மேலதிக தகவல்கள் எதையும் தெரிவிக்க அவர் மறுத்துள்ளார். இந்த திட்டம் நிதி அமைச்சுவரை சென்று, குறிப்பிட்ட நிபந்தனைகள் சிலவற்றுடன் அங்கும் அனுமதி பெறப்பட்டு விட்டதாக இன்டஸ்ட்ரியில் கூறுகிறார்கள்.
தற்போது பொருளாதார ரீதியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விமான நிறுவனம் ஒன்றை கைதூக்கி விடுவதற்காக இந்த ஏற்பாட்டுக்கு அமைச்சு சம்மதித்துள்ளதா, அல்லது, வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்று இதில் ஆர்வம் காட்டி சம்மதம் வாங்கியிருக்கின்றதா என்பது சரியாகத் தெரியவில்லை.
இரண்டுக்குமே சான்ஸ் உள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் உள்நாட்டு முதலீடுகளை பெறுவதற்கு விஜய் மல்லையா செய்துவரும் முயற்சிகள் பெரியளவில் கைகொடுக்காத காரணத்தால், அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் செல்வதற்காக இந்த அனுமதி கொடுக்கப்படலாம்.
அதேநேரத்தில், கடந்த இரு ஆண்டுகளாகவே இரு அரபு நாட்டு ஏர்லைன்ஸ்கள் இந்தியாவுக்குள் தமது சேவையை (உள்நாட்டு பயணம்) கொண்டுவரும் முயற்சியில் மும்மரமான ஈடுபட்டிருந்தன. அவர்களில் யாரோ ஒருவரது முயற்சியின் வெற்றியாகவும் இது இருக்கலாம்.
இந்தியாவில் தற்போது விமான சேவைகளின் துணைப் பிரிவுகளில் (உதாரணமாக cargo handling) 49 சதவீத வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இன்றுவரை அனுமதி கிடையாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக