நடிகை ”சில்க் ஸ்மிதா”வின் வாழ்க்கையை ”தி டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ள ஏக்தா கபூர் பெற்றுக்கொண்டிருக்கும் படத்தின் வசூல் சாதனையை குறிப்பிடுகிறார்கள். படம் ரிலீஸ் ஆன முதல் வாரமே ஐம்பது கோடி வசூலித்துள்ளதாம்.
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா உலகத்தை காட்டிய நடிகரும் இயக்குனருமான வினுச்சக்கரவர்த்தியிடம் படம் பற்றி கேட்ட போது, “சில்க் ஸ்மிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவன் நான். சில்க் பற்றி முழுவதும் அறிந்தவன் நான். சில்க்கின் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் நான் உடன் இருந்திருக்கிறேன். இது போல் சில்க் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்கள் என்று அறிந்ததும் எக்தா கபூரை தொடர்பு கொண்டு, சில்க் பற்றி அதுவும் தெரியாமல் படம் எடுத்தால் அது செக்ஸ் படமாகத் தான் இருக்கும். எனவே அது பற்றிய தகவல்களை நான் தருகிறேன், அதுமட்டுமில்லாமல் கோ-டைரக்டராக வேலை செய்கிறேன்.அதற்காக எனக்கு ஒரு பைசா கூட சம்பளம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அது பற்றி மேற்கொண்டு எந்த விதமான பதிலும் வரவில்லை.
ஏக்தா கபூரின் படத்திற்கு போட்டியாக நான் ஒரு படம் எடுப்பேன். சில்க்கின் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக அது இருக்கும். இந்த படத்தை வடமாநிலத்தில் டிஸ்ட்ரிபியூஷன் செய்யும் உரிமையை ஏக்தா கபூரிடமே கொடுப்பேன். அதற்கு கூட அவர் எனக்கு பணம் தரத் தேவையில்லை, சில்க் பட்ட வேதனையை உண்மையாய் உணர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால் போதும் சில்க் ஆதமா சாந்தி அடைந்துவிடும்.” என்று சொல்லியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக