வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஏடிஜிபி ஜார்ஜை டிஸ்மிஸ் செய்யக்கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு


ADGP George
திண்டுக்கல்: கம்பம் மெட்டுப் பகுதியில் கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு காரணமான கேரளத்தைச் சேர்ந்தவரான டிஜிபி ஜார்ஜை உடனே பணிநீக்கம் செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும், அதனால் அதன் அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. அவ்வாறு புதிய அணை கட்டவிட மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களு்ககு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தேனி மாவட்டம் கம்பம் மெட்டில் திரண்டு போராட்டம் டத்தினர்.
அப்போது பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கேரள கூடுதல் ஏடிஜிபி ஜார்ஜ் தான் காரணம் என்று கருதப்படுகிறது. அவர் கம்பம் வந்த பிறகு தான் போலீசார் போராட்ட விஷயத்தில் தலையிட்டனர் என்று கூறப்படுகிறது.

எனவே, தடியடி நடக்க காரணமாக இருந்த ஜார்ஜை உடனே பணிநீக்கம் செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: