முல்லைப் பெரியாறு அணையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம், ராணுவத்திடம் ஒப்படைக்கலாம்: கலாம்
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை ராணுவத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக அணையை பலப்படுத்தும் வகையில் தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.இதன் மூலம் நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படாது. முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக