சனி, 17 டிசம்பர், 2011

மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்

No 66 Madhura Bus
நெல்லை:  முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் நெல்லை அருகே நடிகர் பசுபதி நடிகை பத்மபிரியா நடித்த மலையாள சினிமா படப்பிடிப்பு நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து படப்பிடிப்பை நிறுத்திய பட குழுவினர் உடனடியாக கேரளாவிற்கு திரும்பிச் சென்றனர்.
நெல்லை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் பஸ் நம்பர் 66 மதுரை என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகன் பசுபதி, நாயகி பத்மபிரியா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்கு வந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க நினைக்கு கேரளா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழ்நாட்டில் மலையாளப் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பேக்அப் செய்த படக்குழுவினர் வந்தவழியே கேரளாவிற்கு திரும்பி சென்றனர். கேரளா எல்லைக்குள் அவர்களின் படப்பிடிப்பு வாகனம் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: