புதன், 21 செப்டம்பர், 2011

சென்னை டாக்டரின் சின்ன சின்ன திருட்டுக்கள் செல்போன்கள் திருடியதை டாக்டர்

சென்னை : மருத்துவமனையில் பணியில் இருந்தபோது நர்ஸ் செல்போனை திருடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் நாராயணன் (31). எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். ரூ.85 ஆயிரம் சம்பளம்.

இந்நிலையில், அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திடீர் திடீரென திருட்டு போனது. டாக்டர் பிரகாஷ் நாராயணன் மீது ஊழியர்கள் சந்தேகப்பட்டனர்.


மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில், இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப் பதிவு செய்தார். விசாரணையில். 3 செல்போன்கள் திருடியதை டாக்டர் பிரகாஷ் நாராயணன் ஒப்புக்கொண்டார். அதன் மதிப்பு ரூ.48 ஆயிரம். இதையடுத்து, பிரகாஷ் நாராயணனை போலீசார் கைது செய்தனர். ஏதாவது ஒரு பொருள் பிடித்திருந்தால், அதை எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம் என்று தெரிவித்த பிரகாஷ் நாராயணன், செல்போன் நன்றாக இருந்ததால் அவற்றை எடுத்து வைத்துக் கொண்டதாக போலீசாரிடம் கூறினார். பணத்துக்காக செல்போன்களை திருடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ÔÔசிலருக்கு எவ்வளவுதான் வசதி இருந்தாலும் சிறிய பொருட்களை திருடத் தோன்றும். அது, ஒரு வியாதி. அதேபோல், டாக்டர் பிரகாஷ் நாராயணன் ரூ.85 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும், செல்போனை திருடியிருக்கிறார்ÕÕ என்றார்.

கருத்துகள் இல்லை: