வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தெரியாம கேஸ் போட்டுட்டோம் எங்கள மன்னிச்சுருங்க அப்படீன்னு

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு தொலைத்தொடர்புத் துறையே காரணம்
புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு, உள்துறை அமைச்சர் சிதம்பரம் பொறுப்பு ஏற்க முடியாது. தொலைத் தொடர்புத் துறையின் முரணான செயல்பாடு தான், இந்த பிரச்னைக்கு காரணம்' என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.


தெரியாம கேஸ் போட்டுட்டோம் எங்கள மன்னிச்சுருங்க அப்படீன்னு ராசாகிட்டயும் கனிமொழிகிட்டையும் சிபியை சொல்லீட்டு கேச மூடிருமோ ? போற போக்க பாத்தா அப்படிதான் தெரியுது 
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' எனக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. சி.பி.ஐ., வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்,
நேற்றைய வாதத்தில் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துடன் பேசுவதற்காக, நிதி அமைச்சகத்தால், அப்போதைய நிதித் துறை செயலர் தான், பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தொலைத் தொடர்பு ஆணையம் தலையிடுவதை, தொலைத் தொடர்புத் துறை விரும்பவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக, 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலை, 2003ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத் துறை முரண்பாடாக செயல்பட்டது. அனைத்து தவறுகளையும் செய்தது, தொலைத் தொடர்புத் துறையே. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல், அமைச்சர் சிதம்பரம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதில், அப்போதைய நிதித் துறை செயலரும், தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னருமான வி.சுப்பாராவும் அடக்கம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், அப்போதைய நிதி அமைச்சருக்கு பொறுப்பு உள்ளது என, மனுதாரர் கூறினால், அதே அளவு பொறுப்பு, அப்போதைய நிதித்துறை செயலருக்கும் உள்ளது. நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதம் ஒன்றை, சுப்ரமணியசாமி நேற்று (நேற்று முன்தினம்) கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த கோர்ட், அந்த அறிக்கையை சார்ந்து செயல்படக் கூடாது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்த, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூட, இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகத்தின் மீது தவறு இருப்பதாக, ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை.

முன்னாள் அமைச்சர் ராஜா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபின், இந்த விவகாரத்தை, சுப்ரீம் கோர்ட், மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில், "2ஜி' ஒதுக்கீடு விவகாரத்தில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் எஸ்ஸார் குரூப்புக்கும், லூப் டெலிகாமுக்கும் உள்ள தொடர்பு குறித்த, மற்ற இரண்டு வழக்குகளை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கலாம். இவ்வாறு கே.கே.வேணுகோபால் வாதாடினார்.

"லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது': ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ்,"இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. இதற்கு மேலும், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பது சரியல்ல. இது, விசாரணை கோர்ட் வரம்பிற்கு உட்பட்டது. இந்த விஷயத்தில், "லட்சுமண ரேகை'யை, சுப்ரீம் கோர்ட் தாண்டக் கூடாது' என்றார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்,"லட்சுமண ரேகையைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள். லட்சுமண ரேகையை சீதை தாண்டாவிட்டால், ராவணன் கொல்லப்பட்டு இருக்க மாட்டான். இந்த வழக்கில் போதிய அளவில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தான், சுப்ரீம் கோர்ட் தலையிட்டது' என்றனர்.

கருத்துகள் இல்லை: