தகராறு காரணமாக, இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.இலங்கையைச் சேர்ந்தவர் பெரில் அந்தோணி நோனிஸ்(45). 2004ல், அகதியாக சென்னை வந்த இவர், போதைபொருள் கடத்தலில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்தாண்டு ஏப்ரலில் விடுதலையான இவர், சிறை நண்பர் ஜேசுமரியான் உதவியுடன் தூத்துக்குடி வந்தார். வாசனை திரவியம் விற்பனை செய்த இவர், காதர் மீரான் நகரில் ரெபேக்காள் என்ற பெண்ணுடன் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தினார். பெரில், அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரெபேக்காள் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டுவெளியேறினார். இதனால், மனமுடைந்த பெரில், நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தெர்மல்நகர் போலீசார் விசாரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக