ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மாறன் சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி

கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான். இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார். தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது. அப்போது அவர் மத்திய அமைச்சர். தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார். மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார். இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.
கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தலா 100 கோடி ரூபாய். இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில். கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சன் டிவி. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று ஊடகத்துறையையே விழுங்க அலைந்து கொண்டிருக்கும் இந்த ஆக்டோபஸின் மிக முக்கியப் புள்ளி தான் இந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

பூமாலை வீடியோ கேசட்டாக இருந்து சன் டிவியாக மாற்றம் பெரும் போது கேடி பிரதர்ஸ் சார்பில் போடப் பட்ட முதலீடு வெறும் இருபது லட்சம். ஆனால், அன்று தனது நண்பர்களுக்காக முதலீடு போட்டு, இந்த ஆக்டோபஸ் உருவாகக் காரணமாக இருந்த நபர் சரத் ரெட்டி. கேடி சகோதரர்களின் வகுப்புத் தோழர். சரத் ரெட்டி செய்த முதலீடு 80 லட்சம்.

இன்று தமிழ்நாட்டில் தீய சக்தி யாரென்று பார்த்தீர்களென்றால், அது இந்த கேடி சகோதரர்கள் தான். இந்த கேடி சகோதரர்கள், அணு குண்டு வெடித்தால் ஏற்படும் கதிரியக்கத்தை விட மோசமானவர்கள். அணுக்கதிர் வீச்சு, எப்படி பரவிய இடத்திலேல்லாம் சர்வ நாசத்தை ஏற்படுத்துமோ, பல ஆண்டுகளுக்கு புல் பூண்டு முளைக்காமல் செய்யுமோ, அதைப் போல மிக மோசமான விளைவை ஏற்படுத்துபவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.

கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான். இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார். தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.

தனது மகன்களுக்கு ஆத்திரம் இருக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். இந்த கேடி சகோதரர்களின் ஆணவத்திற்கு ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர்கள் உதாரணமாக சொல்கிறார்கள்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது. அப்போது அவர் மத்திய அமைச்சர். தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார். மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார். இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.
கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தலா 100 கோடி ரூபாய். இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில். கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த கேடி சகோதரர்களை எதிர்க்க வலுவான நபர், அழகிரி என்றாலும் அழகிரிக்கு இந்த சகோதரர்களின் சாதுர்யம் இல்லாததால், இவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியவில்லை.

80 லட்ச ரூபாய் முதலீடு செய்து, சன் ஆக்டோபஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சரத் ரெட்டி, கேடி சகோதரர்களால் விரட்டியடிக்கப் படுகிறார். விரட்டியடிக்கப் பட்ட அவர், ஆந்திரா சென்று வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்தச் சூழலில் குடும்பம் பிரிந்து கலைஞர் டிவி என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. முடிவெடுத்தவுடன், ஆற்காடு வீராச்சாமி ஆந்திரா சென்று, சரத் ரெட்டியைச் சந்தித்து, உடனடியாக கலைஞர் டிவிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன் படி சரத் ரெட்டி கலைஞர் டிவியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

சரத்ரெட்டி எதிரி முகாமுக்கு தலைமை ஏற்கிறார் என்றதும், கேடி சகோதரர்கள் மீண்டும் சரத் ரெட்டியை அணுகி சன் டிவிக்கு வேலைக்கு வருமாறு வெட்கமில்லாமல் கேட்கின்றனர். ஆனால் சரத் ரெட்டி மறுத்து விடுகிறார்.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கருணாநிதி “இதயம் இனித்தது. கண்கள் பனித்தது“ என்கிறார். இது நடந்த மறு நாளே கேடி சகோதரர்கள், சரத் ரெட்டியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு செல்கின்றனர். குடி போதையில் எங்களையாடா எதிர்க்கிறாய் என்று சரத் ரெட்டியை பின்னி எடுக்கிறார்கள். சரத் ரெட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. கலாநிதி மாறன் ஒரு பக்கமும், காவேரி கலாநிதி மறு பக்கமும், சரத் ரெட்டியை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அன்று அந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வரவே செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், கருணாநிதி மவுனச் சாமியார் போல உட்கார்ந்திருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று கருணாநிதி தனது பேரன்கள் என்று பார்க்காமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பாரே யானால், இன்று தனது பேரன்களின் அல்லக்கையான துவைக்காத சாக்ஸ் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்குமா ?

அந்த ஞாயிறு அன்று இரவு என்ன நடந்தது. நீலாங்கரையில் ஒரு பண்ணை வீட்டில் கலாநிதி மாறன் ஒரு ரேவ் பார்ட்டி நடத்துகிறார். அந்த ரேவ் பார்ட்டியில், சன் டிவியின் சிஇஓ துவைக்காத சாக்ஸும், சன் நியூஸ் எடிட்டர் ஆர்எம்ஆரும் கலந்து கொள்கிறார்கள். பார்ட்டி முடிந்து வெளியே வரும் போது கார் மற்றொரு கார் மீது மோதி ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது. துவைக்காத சாக்ஸும், ஆர்எம் ரமேஷூம் “நிதானத்தில்“ இருந்ததால் அந்த மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

அந்த வாக்குவாதம் கை கலப்பில் முடிகிறது. அந்தப் பெண்ணின் தம்பி சித்தார்த்தையும், அந்தப் பெண்ணையும் தாக்க முயல்கிறார்கள். இருவரும் தப்பி தங்கள் வீட்டுக்கு ஓடுகிறார்கள். அங்கே இருந்த அவர்கள் காரை அடித்து சேதப் படுத்தியதோடு அவர்கள் வீட்டுக்குச் சென்று காரையும் வீட்டையும் அடித்து சேதப் படுத்தி அந்தப் பெண்ணையும் தாக்குகிறார்கள். அவரின் தம்பி சித்தார்த் தலைமறைவாகிறார்.

இந்தத் தாக்குதலில் துவைக்காத சாக்ஸின் ஆத்திரம் அடங்காததால் அந்த சித்தார்த்தின் நண்பரும், ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் வினோஜ் செல்வம் நடத்தும் செக்கர்ஸ் ஓட்டலுக்கு ஏராளமான அடியாட்களை அழைத்துச் சென்று ஒரு பெரும் தாக்குதலை துவைக்காத சாக்ஸ் நடத்துகிறார்.

இந்தத் தகவல், இரவு ட்யூட்டியில் இருந்த மீடியா நிறுவனங்களுக்குத் தெரிந்து, அனைவரும் தாக்குதலை படம் பிடிக்கின்றனர். இது தவிரவும், அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் முழுமையாக பதிவாகிறது.

மறு நாள் ஜெயா டிவியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிறது. ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பெரியதாக செய்தி வெளியிடுகின்றன.

இந்தச் செய்திகளை பார்த்ததும் வேறு வழியின்றி, கண்ணாயிரம் எஃப்ஐஆர் பதியச் சொல்லி உத்தரவிடுகிறார்.

துவைக்காத சாக்ஸ் முதல் எதிரியாக குறிப்பிடப் படுகிறார். இரண்டு வழக்குகள் பதியப் படுகின்றன.

ஆனால் வழக்கு பதியப் பட்டதும், துவைக்காத சாக்ஸ் எங்கிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தும், கண்ணாயிரம் அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு சில ஆட்டோ டிரைவர்களை கைது செய்யச் சொல்லுகிறார். அதன் படி ஒரு பத்து ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பிறகு, இந்த துவைக்காத சாக்ஸ் ஜெயா டிவிக்கும் மற்ற ஊடகங்களையும் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயா டிவி தரப்பிலும், நம் தினமதி தரப்பிலும், இது மறுக்கப் படுகிறது.

தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வாரமிருமுறை இதழ், துவைக்காத சாக்ஸ் விஷயத்தில் தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. மீறி துடித்தால், விகடன் டாக்கீஸின் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் ஆபத்து என்பதால் அதைப் பற்றி மூச்ச விடவில்லை.

துவைக்காத சாக்ஸ் இந்தியாவில் இருந்தால் ஒரு வேளை கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சி, வெளி நாட்டுக்கு கிளம்புகிறார். இவர் கிளம்புவது பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும் போது கண்ணாயிரத்திற்கு தெரியாதா ? ஆனால் கண்ணாயிரம் நிம்மதியாக கண்ணயர்ந்திருக்கிறார்.

துவைக்காத சாக்ஸ் வெளி நாட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தும்மியதற்குக் கூட வளைத்து வளைத்து கைது செய்த கருணாநிதியின் காவல்துறை, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக பலரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறை, கருப்புக் கொடி காட்டியதற்காக கடுமையாக தாக்கிய காவல்துறை, ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கி, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது.

அன்று கேடி சகோதரர்கள் சரத் ரெட்டியை அடித்து காலை முறித்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கேடி சகோதரர்களின் அல்லக் கைக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா ?

கேடி சகோதரர்களின் அல்லக்கை மீதே நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவில்லை என்றால், கேடி சகோதரர்கள் செய்யும் அத்தனை காரியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருப்பார் ?

இந்த துவைக்காத சாக்ஸ் எழுப்பும் துர்நாற்றத்தை கருணாநிதி சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இந்த துர்நாற்றத்தில் கருணாநிதிக்கு மிகுந்த உடன்பாடு என்று தானே பொருள் கொள்ள முடியும் ?

கருத்துகள் இல்லை: