கேபிள் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது!
கேபிள் கார்ப்பரேஷன் சேர்மனை அழைத்த முதல்வர், 'கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு கேபிளில் எல்லா சேனல்களும் வர ஏற்பாடு பண்ணுங்க!’ என்றார். அதன் பிறகே, பேச்சுவார்த்தைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அந்தக் குழு பேசத் தொடங்கிவிட்டது. முதலில், சோனி நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தது. அரசு கேபிளுடன் இணைந்து செயல்பட அவர்களுக்கு சம்மதம். பிறகு ஸ்டார் மற்றும் சன் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால், அது இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. சேனல் தர சம்மதம்தான்... ஆனால், தொகை விஷயத்தில்தான் இழுபறி என்கிறது கோட்டை வட்டாரம்!
''வரும் 27-ம் தேதி கன்னியாகுமரியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதில் பல முக்கியமான முடிவுகளையும் எடுக்கப்போகிறோம்!'' என்று சகிலன் தரப்பில் பேச்சு. இதற்கு மத்தியில் டிடிஹெச் வசதிக்கு 30 சதவிகித வரி போட்டுள்ளது தமிழக அரசு. இது எதற்கான முஸ்தீபு என்றும் பேச ஆரம்பித்துள்ளார்கள் விவரமறிந்தவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக