ஞாயிறு, 15 மே, 2011

யாழ். நகர போக்குவரத்துக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு


jaffna1105-1
யாழ். நகரின் போக்குவரத்துடன் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வுகாணும் முகமாக யாழ். மாநகர சபை முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அவையாவன கீழ்வருமாறு,
01. - இடங்களிலிருந்து யாழ். நகரை நோக்கி வரும் பஸ்கள் 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூர இடங்களில் இருந்து யாழ்.நகரத்துக்கு வரும் பேருந்துகள் பண்ணை தனியார் பஸ் நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். இ.போ.ச. வாகனங்களும் இதிலடங்கும்.
02. கஸ்தூரியார் வீதிக்கு கஸ்தூரியார் வீதிக்கும் ஆஸ்பத்திரி வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஒரு வழிப் பாதையாக பயன்படுத்துவதெனவும் பாதையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதெனவும், தேவை ஏற்படின் பொலிஸாரின் ஒத்துழைப்பைபெற்றுக் கொள்வது. குகஸ்தூரியார் வீதியில் பொருட்களை இறக்கும் செயற்பாடுகளை பகல் 11.00 மணி தொடக்கம் 2.00 மணி வரையும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னரும் மேற்கொள்ளலாம்.
03. ஆஸ்பத்திரி வீதி, ஆஸ்பத்திரி வீதியைப் பொறுத்தவரை அதனைத் தற்போது இரு வழிப்பாதையாகப் பயன்படுத்துவது. ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட படி வீதியின் மையப்பகுதியில் அமைவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முச்சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் கார்கள் முதலிய சிறியரக வாகனங்களை நிறுத்துவதை அங்கீகரிப்பது. வானத்தரிப்பு விபரம் விளம்பரப் பலகை மூலம் அறிவிக்கப்படும். அப்பலகைகள் மீது விளம்பரம் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
ஆஸ்பத்திரி வீதியில் பொருட்களை இறக்கும் செயற்பாடு தினமும் மாலை 6.00 மணிக்கு பின் மேற்கொள்வதை அங்கீகரிப்பதெனவும், பகல் நேரத்தில் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் கந்தப்பசேகரம் வீதி வழியா கபொருட்களை ஏற்றியிறக்க அனுமதிப்பதெனவும் தீர்மானிக் கப்பட்டது.மேற்படி வீதியில் மூன்று பாதசாரிக் கடவைகள் இனம் காணப்பட்டு அடையாளமிடப்பட்ட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆஸ்பத்திரி வீதியில் சுற்றுலாப் பயணப் பேருந்துகள் தரித்து நிற்பதை தடைசெய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
04. காங்கேசன் துறை வீதி, கே.கே.எஸ் வீதி சுற்றுவட்ட வீதிக்கும் சி.பொன்னம்பலம் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் ஒற்றை நாள், இரட்டை நாள் என்ற அடிப்படையில் நிறுத்தப்படுவதைக் கண்டிப்பாக அமுல்செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. சி.பொன்னம்பலம் வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட வீதி ஒரு வழிப் பாதையாகவும் வாகன நிறுத்தத்திற்கு தடைசெய்யப்பட்ட இடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு அவ்வீதியைக் கண்டிப்பாக அமுல்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. கே.கே.எஸ்.வீதியில் பொருட்களை ஏற்றியிறக்கலை பி.ப.6.00 மணிக்கு பின்னரே அனுமதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நடைமுறை மேற்படி வீதியை அமுல்படுத்தும் காலம் வரை அமுலில் இருக்கும். வீதி அகலப்படுத்தப்பட்ட பின் இவ்வீதிப் பாவனை மறுபரிசீலனை செய்யப்படும்.
05. ஸ்ரான்லி வீதி இருவழிப் போக்குவரத்துப் பாதை மோட்டார் சைக்கிள், சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் ஒற்றை, இரட்டை நாள் தரிப்பு முறையைப் பின்பற்றி நிறுத்தப் படுவது அனுமதிக்கப்படும். பொருட்களை ஏற்றி இறக்கும் செயற்பாடு தினமும் பி.ப 6.00 மணிக்குப் பின்னரே இடம்பெற அனுமதிக்கப்படும். ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாகவும் நாக விகாரைக்கு அருகாமையிலும் பாதசாரிக் கடவைக் குறியீடுகள் பொறிக் கப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
06. மின்சார நிலைய வீதி, இருவழிப் போக்குவரத்துப் பாதை, சி.பொன்னம்பலம் வீதியில் இருந்து ஸ்ரான்லி வீதி வரையான பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் சகல வாகனங்களும் ஒற்றை, இரட்டை நாள் தரிப்பு முறையின் படி தரித்து நிற்க அனுமதிக்கப்படும். மினி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் 15 நிமிடங்களுக்கு மேற்படாமல் தரித்து நின்று ஏற்றி இறக்கலை அனுமதிக்கலாமெனத் தீர்மானிக்கப்பட்டது. பொருட்களை ஏற்றி இறக்கும் செயற்பாடு பி.ப 6.00 மணிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும். ஸ்ரான்லி வீதியையும் மின்சார நிலைய வீதியையும் இணைக்கும் வீதியில் கனரக வாகனப் பாவனை தடைசெய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிய ரக வாகனங்கள் இவ்வீதியை இரு வழிப் பாதையாக பயன்படுத்த முடியுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
07. மினி பஸ் செயற்பாடுகள் பற்றிய நடைமுறைகள் யாழ். நகரத்திற்குள் பருத்தித்துறை வீதி வழியாகப் பிரவேசிக்கும் மினி பஸ்கள் விக் டோறியா வீதி வழியாக மின்சார நிலைய வீதியை அடையும்.தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து பருத்தித் துறையை நோக்கிச் செல்லும் மினி பஸ்கள் மின்சார நிலைய வீதியூடாக சென்று ஸ்ரான்லி வீதி வெலிங்டன் தியேட்டர் சந்தியை அடைந்து ஆரியகுளம் வழியாக பருத்தித்துறை நோக்கி செல்லும்.
பருத்தித்துறையிலிருந்து யாழ். நகரத்தினுள் வரும் இ.போ.ச. பஸ்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக நகரத்தை அடையும். நகரத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போது மினிபஸ் பாதையையே பயன்டுத்த வேண்டும். மானிப்பாய், காரை நகர், வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் இ.போ.ச. பேருந்துகள் ஏற்கனவே பாவித்த வழித்தடத்தையே பின்பற்றலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: