செவ்வாய், 17 மே, 2011

2600வது புத்த ஜயந்தி வெசாக் மகோற்சவத்தை பக்திபூர்வமாக

உலக வாழ் பெளத்த மக்களின் மிக முக்கியத்துவ மிக்க 2600 ஸ்ரீ சம்புத்த ஜயந்தி வெசாக் போயா தினம் இன்றாகும். 2600 சம்புத்த ஜயந்தி விழாவைக் கொண்டாடிவரும் உலக வாழ் மக்கள் சமய ரீதியான நற்கருமங்களில் இன்றைய தினத்தில் ஈடுபட்டு வரும் அதேநேரம் இலங்கைவாழ் மக்களுக்கும் நல்லாசி வேண்டி பல்வேறு சமய அனுஷ்டானங்க ளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்டி ஸ்ரீதலதாமாளிகை, அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதி, களனி, மஹியங்கனை, கிரிவெஹர என்பன அவற்றிலே முக்கிய சில இடங்களாகும். அவ்வாறே நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விஹாரைகள் உட்பட பல்வேறு இடங்களில் சமய ரீதியான விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். ஸ்ரீ சம்புத்த ஜயந்தி வெசாக் உற்சவத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் பிரதான 08 வலயங்களாக பிரிக்கப்பட்டு அவற் றிலே 18 வெசாக் தோரணங்கள் 50 பாரிய வெளிச்சக் கூடுகள் மற்றும் சோறு உள்ளிட்ட 180 ற்கும் மேற்பட்ட அன்ன தான நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
லேக் ஹவுஸ், பெளத்தாலோக்க மாவத்தை, காலி முகத்திடல், கங்காராம, விஹாரமகாதேவி மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இவ்வெசாக் வலயங்கள் அமைந்துள்ளன.
முகத்துவாரம், பெலியகொடை, கோட்டை, புறக்கோட்டை, பொரளை, பெளத்தாலோக்க மாவத்தை, தெமட்டகொட, கிரேன்ட்பாஸ், கொள்ளுப்பிட்டிய, கொம்பனித்தெரு, கறுவாத்தோட்டம் உட்பட கொழும்பு நகரை அண்டிய மேலும் பல பிரதேசங்களில் பாரிய அளவிலான 18 வெசாக் தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கொம்பனித் தெருவில் மாத்திரம் சுமார் ஐந்து தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கொழும் பிலுள்ள 08 வெசாக் வலயங்கள் மற்றும் அதை அண்டி அமைக்கப்பட்டுள்ள தோரணங்கள் என்பவற்றிற்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜயகொடி தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் 24 மணி நேரமும் அமுல் படுத்தப்படும் வகையில் அந்த வேலைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து விகாரைகளுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலி யுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: