ஞாயிறு, 15 மே, 2011

தேனிலவில் இந்திய பெண் கற்பழித்து கொலை.கணவரே கூலிபடையை ஏவி

லண்டன்: ஆப்ரிக்க்காவில் தேனிலவிற்கு சென்ற இளம்பெண்ணை கற்பழித்ததாக மூன்று பேர் மீது லண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியவம்சாவழியை சேர்ந்த பெண் ஆனி(28) இவர் தனது கணவர் ஷெரின்(31) உடன் தன்னுடைய தேனிலவை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி தென்னாப்ரிகாவிற்கு சென்றிருந்தார்.அந்நாட்டின் பல்வேறு நகரங்களை சுற்றிப்பார்த்தபின்னர் கேப்டவுன் நகருக்கு வந்தபோது அங்கு ஆனி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.இச்சம்பவத்தில் ஷெரின் மற்றும் அவர்கள்வந்த கார் டிரைவரும் மாயமானார்கள். இந்நிலையில் கடத்தப்பட்ட ஆனி கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணவர் ஷெரீனே கொலைக்கு காரணமாக இருந்ததும், கொலையை நிறைவேற்ற ஆப்ரிக்காவை சேர்ந்த கூலிப்படையை நியமித்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர்.மேலும் ஷெரின் மனநலம் பாதிப்பு காரணமாக பிரிஸ்டல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: