செவ்வாய், 17 மே, 2011

கல்முனை, சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்


கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார்.
சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும்.
அத்தோடு அங்கவீனமானவர்களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவு ள்ளதாகவும் இந்த மாணவன் சஞ்ஜீவநாத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: