திங்கள், 16 மே, 2011

அப்பாவிக் குழந்தைகளின் உள்ளங்களில் குரோதம், பகைமையை விதைக்காதீர்கள்

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி விழாவில் ஜனாதிபதி
அப்பாவிக் குழந்தைகளின் உள்ளங்களில் வைராக்கியம், குரோதம், பகைமை போன்ற உணர்வுகளை விதைக்காது அவர்களை சமூகத்திற்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடியவர்களாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் வைர விழா நேற்று மாலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு கல்லூரி அதிபர் கலாநிதி த. முத்துகுமார சுவாமி பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். கல்லூரியின் வைரவிழா சிறப்பு மலரின் முதல் பிரதி ஜனாதிபதிக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கல்லூரி அதிபர் உட்பட நீண்ட காலம் சேவையாற்றிய ஆசிரியர்களும் விருது வழங்கி கெளரவி க்கப்பட்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பு இந்துக் கல்லூரியின் வைர விழாவில் (60வது வருட விழா) கலந்து கொள்ளுவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது வரலாற்று சிறப்பு மிக்க செயல் திறனான பாடசாலை. இப்பாடசாலை 1951ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

அன்று இது பிள்ளை யார் பாடசாலை என்றே அழைக்கப்பட்டது. என்றாலும் இன்று இது இந்துக் கல்லூரியாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உருவான முதலாவது தேசியப் பாடசாலை இது. இக்கல்லூரியைக் கட்டியெழுப்புவதற்காக அரும்பாடுபட்டவர் களை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் நன்றி மறந்தவர்களாகச் செயற்படக் கூடாது.

பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் போன்றவர் கள் இந்நாட்டுக்குப் பாரிய சேவை செய்துள்ளார்கள். இதனை நாம் மறந்து விடமுடியாது. கல்வி விலை மதிக்க முடியாத செல்வம். இதனை உலகில் எவராலும் திருட முடியாது. அதேநேரம் கல்வி கற்பது மாத்திரம் போதாது.

மாறாக கல்வியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு மனிதாபிமான பழக்க வழக்கங்களையும் ஊட்ட வேண்டும். இக்கல்லூரியில் கற்ற மாணவர்கள் பலர் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இது பெரிதும் பாராட்டத்தக்க விடயமாகும். என்றாலும் குழந்தைகள் பெற்றோரை மதித்து, நடப்பதற்கு மறந்து விடக் கூடாது.
நீங்கள் உங்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்துள்Zர்கள் என்று ஒரு தரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களது தாய்நாட்டை மறந்து நீங்கள் ஒரு போதும் செயற்பட முடியாது. மேலும் பெளத்த மக்கள் மத்தியில் இந்துக்களின் பிள்ளையார் கடவுள் வழிபாடு நன்கு பிரபல்யமானது.

இதனை நாம் மறந்து விடமுடியாது. அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் உலகம் பூராவும் வாழும் பெளத்த மக்கள் 2600வது சம்புத்தத் ஜயந்தி விழாவைக் கொண்டாடவிருக்கின்றார்கள். பெளத்த மற்றும் இந்து மதங்களிடையே நல்ல நெருக்கமான உறவு உள்ளது.

என்றாலும் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் அச்சம், பீதியின்றி எந்த வைபவத்திலுமே ஈடுபட முடியாத நிலைமையே நிலவியது. இன்று அந்த நிலைமை இல்லை. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. அச்சம், பீதியின்றி வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மத வழிபாடுகளில் கூட இன்று சுதந்திரமாக ஈடுபடுகின்றோம்.

இன்று நாம் எல்லோரும் அச்சம், பீதியின்றி ஒன்றாக வாழுகின்றோம். மதங்கள் அன்பையும் கருணையையும் போதிக்கின்றன. நாம் மனிதர்களுக்கு மாத்திர மல்லாமல் ஏனைய உயிரினங்களுக்கும் கூட கருணை, அன்பு காட்ட வேண்டும்.

நாம் வரலாற்றில் செய்த தவறுகளையும், பிழைகளையும் திரும்பிப் பார்க்கத் தேவை இல்லை. எமது அப்பாவிக் குழந்தைகளின் உள்ளங்களில் நாம் வைராக்கியம், கோபம், பகைமை போன்ற உணர்வுகளை விதைக்கக் கூடாது.

அவர்களை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றக் கூடியவர்களாக கட்டியெழுப்ப வேண்டும். அவர்களது உள்ளங்களுக்கு அன்பும், கருணையும் ஊட்ட வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்த பிரஜைகளாக கட்டியெழுப்ப வேண்டியது பெற்றோரினதும், ஆசிரியர்களி னதும் பொறுப்பாகும். இப்படியான சமூகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்களாவர். இருந்த போதிலும் இந்நாட்டுக்கு ஒரு போதும் வந்திராத புலம்பெயர் தமிழர்கள் சிலர் எமது நாடு குறித்து பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் இங்கு பிறந்தவர்களும் அல்லர். இங்குவாழும் தமிழ் மக்களை அவர்கள் நேரில் சந்தித்தவர்களும் அல்லர்.

நாமெல்லோரும் இந்நாட்டுப் பிரஜைகள். அதனால் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி என்ற தொனிப் பொருளில் ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் இங்கு வாழுவோம். ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.

இந்நிகழ்வில் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன ஸ்ரீலாஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள், இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி, சர்பரூபானந்தா, சம்மாங்கோடு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவாச்சாரியார் மணிக் குருக்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, எம்.பிக்கள் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.சுமந்திரன், விஜய கலா மகேஸ்வரன், பிரபா கணேசன், இந்து வித்தியாபிவிருத்திச் சங்க பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள

கருத்துகள் இல்லை: