செவ்வாய், 29 மார்ச், 2011

"தலிவரு'தான் காரணம்:குஷ்பு பேச்சால் தொண்டர்கள் குழப்பம்

:திண்டுக்கல் நத்தம்,கோபால்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல் நாகல் நகரில் நேற்று முன் தினம் இரவு தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பேசினார். பழநியிலும், அவர் பிரசாரம் தொடர்ந்தது. அவர் என்ன பேசினார் என்பதே, கூடியிருந்த தொண்டர்களுக்கு புரிய வில்லை.திண்டுக்கல்:உங்கள ஒருத்தி...உங்கள் மருமகளாக இல்லா, மகளா வருவது சந்தோஷ்ம். தலைவரு மக்களுக்கு ஒலக்கிறாரு.எலக்ட்ரிக்சிட்டி பிராபளத்திற்கு காரணம், கடந்த அ.தி.மு.க., ஆட்சி தான்.
2001-2006 வரை சிட்டிங் எம்.எல்.ஏ., விசுவநாதன் தான் மின் துறை அமைச்ரா இருந்தாரு. தமிழ் மனம்(மானம்) இருட்டில் போகாமல் காக்க பல பவர் பிளான்ட், வின்ட் மில்களை தலிவரு (கருணாநிதி) கொண்டு வந்துருக்காரு. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் ஆள் கடத்தல் நடக்குது. எதை எடுத்தாலும் அந்தம்மா கருணாநிதிதானு சொல்றாங்க. ஜப்பான் சுனாமிக்கும் கருணாநிதி பெயர சொல்வாங்க.பழநி: தி.மு.க., தொண்டரா இங்க வரல. ஒங்கள் வீட் மருமகளாக வரல. ஒங்க வீட் மகளாக இங்க வந்துருக்கேன். ஒங்கள்குள்ள ஒருத்தரா வந்துருக்கேன். ஏப்ரல் 13ந்தேதி ஒங்க பொன்னான வோட்கள போட்டு ஜெய்க்க வைக்கணும். யாரும் நம்பாதிங்க, அதுவ்ம் அந்தம்மா கண்டிப்பாக நம்பாதிங்க.
தலைவர் அவரொடய உடன்பிறப்கள்க்காக, தமிழ் மக்கள்க்காக, உயிர்க் உயிரா நேசிக்ற ஒங்ளுக்காக, கடந்த எம்பத்தஞ்சு வருஷ்மா ஒல்ச்சிட்டிருக்காரு. 12 வயஸ்லர்ந்து, இன்னி வரைக்கும், இந்த நிமிஷ்ம் வரைக்கும், இந்த நொடி வரைக்கும், உடன்பிறப்புகள்க்காக ஒல்ச்சிட்டிர்க்காரு.அவர்டய சாதனைகள் பத்தி பேசிட்டே போலாம். கலைஞர் உயிர் காப்பீட்டு திட்டம், "108" ஆம்புலன்ஸ் திட்டம், மகளிர்களுக்கு சுயஉதவிக்குழுக்கள் அதுல இரண்டு லட்சம் ரூபாய் லோனு, ஆறாவதா முதல்வரானா அத நாலு லட்சமா மாத் போறார், அதுல இரண்டு லட்ச ரூபா மான்ய தொகை, இலவச காஸ் அடுப்பு, இலவச வண்ண தொலக்காச்சி, ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி, தர்மான மளிகை பொருட்கள், மளிகை சாமானு கெடிக்குது.எல்ல மாவட்டத்லயும் கல்லூரி, எந்த ஊர்லயும் படிக்ற வசதி கடிக்க போகுது.
பசங்க ஸ்கூல்கு போணுங்றதுகாக, அஞ்சுநாள் முட்ட. பெண் படிச்சா அந்த குடும்பத்தை முன்னேத்லாம். அத்காக, பெண்கள்க்கு கல்லூரி வரைக்கும் படிப்பு இலவசம். அந்தம்மா என்ன பண்ணிருக்காங்க. ஒண்ணுமே பண்ணல. அந்தம்மா சொந்தமா எதும் யோசிக்றது கெடியாது. யாரோ எழ்தி கொடுத்தத, அப்டியே படிக்றது. ரண்டுக்ராம் தங்கம், ஒருக்ராம் தங்கம்னு பிச்ச போட்ராங்க. அவங்ள நம்பாதிங்க.வைகோ அண்ணன் நம்பி, அவங்க கூட அஞ்சு வருஷ்மா இருந்தாங்க. எதோ ஒரு தனியார் கம்ப்னிகிட்ட பணம் வாங்கிட்டு, அவர தூக்கி போட்டாங்க. நாளிக்கு இன்னோர் கம்ப்னிகிட்ட பணம் வாங்கிட்டு, தமிழகத்தயே வித்டுவாங்க. தலைவர் மட்டுந்தான் செய்றத சொல்வார். சொல்றத செய்வார்.
ஒங்கள்க்காக 500 ரூபாலேர்ந்து 750 ரூபா பென்ஷன். 58 வயஸ்க்குமேல எல்லார்க்கும் இலவச பஸ் பாஸ் எல்லாம் பண்றார். ஆறாவ்து மொறையா ஜெய்ச்சா, மிகப்பெரிய சாதனை அவர்க் சேரும். இந்தியாவ்ல மட்டும் இல்ல, ஆசியாவ்லயே அந்த சாதனை இதுவரைக்கும் கெடயாது. இந்த தேர்தல்ல தலைவர் கலைஞரை ஜெய்க்க வச்சு, ஆறாவது முதல்வரா புதிய கட்டட்த்துல ஒக்கார வப்பம்.இவ்வாறு குஷ்பு பேசினார்.
* நத்தம் கூட்டத்தில் புகுந்த தொண்டர் ஒருவர், குஷ்புக்கு கைகொடுக்க வாகனத்தில் ஏறினார். குஷ்பு வணக்கம் மட்டும் தெரிவித்தார். தொண்டர் விடாமல் கையை நீட்டினார். அருகில் இருந்தவர்கள் தொண்டரை ஒரு கவனிப்பு கவனித்து வெளியேற்றினர்.
* குஷ்பு வந்தவுடன் அன்னை குஷ்பு, நம்ம வீட்டு அக்கா குஷ்பு, தமிழ் திரையுலகின் தங்கமங்கை வாழ்க என்று ஏராளமான பட்டங்கள் சூட்டி தொண்டர்கள் கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை: