ஞாயிறு, 27 மார்ச், 2011

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ

தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதய மானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.

அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க., வந்தது. அந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை; அவர்கள் தான் எங்கள் அணிக்கு வந்தனர். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கள் கட்சியை அவமதித்தார். 22 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை எனக் கூறினார். ஒட்டுமொத்தத் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, அந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத் தோம். 35 தொகுதிகளில் போட்டி யிட்டு, ஆறு தொகுதி களில் வெற்றி பெற்றோம். ஏழெட்டு தொகுதி களில், சொற்ப ஓட்டு களில் வெற்றி வாய்ப் பை இழந்தோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தனித்து வென்ற நகராட்சிகளிலேயே எங்களுக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டன; பொறுத்துக்கொண்டோம். எங்கள் எம்.எல்.ஏ., வீர.இளவரசன் இறந்த திருமங்கலம்தொகுதியை அ.தி.மு.க., வலியுறுத்திக் கேட்டது; விட்டுக்கொடுத்தோம். எங்கள் வேட்பாளர் வென்ற கம்பம் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறினார்; ஏற்றுக் கொண்டோம். கொள்கைகளைத் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் அ.தி.மு.க.,வுடன் அனுசரித்தே நடந்துகொண்டோம்.

இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி... புதிய கட்சிகள் வருகின்றன... நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், "கடந்த முறை கொடுத்த 35 கொடுத்துவிடுங்கள்' என்றோம். "நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர். பிப்ரவரி 28ம் தேதி, "25 இடங்களாவது வேண்டும்' என்றோம். மார்ச் 8ம் தேதி போயஸ் தோட்டத்திற்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், "நீங்கள் ஆறு இடங்களில் தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அவற்றையே எடுத்துக்கொள்ளுங்கள்' என்றனர். இதை என் தோழர்கள் வந்து சொன்னபோது, இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது போல இருந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தேன். மறுபக்கம், கம்யூனிஸ்டுகளுக்கு 10, மார்க்சிஸ்டுக்கு 12, இன்னொரு கட்சிக்கு 41 என, ஒதுக்கீடுகள் முடிந்தன. மார்ச் 12ம் தேதி, கூட்டணிகளுக்கு 74 தொகுதி ஒதுக்கியது போக, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிட்டது. அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்றே, தே.மு.தி.க., அலுவலகத் துக்குச் சென்றனர். அவர்கள் பேச்சு நடத்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?

மார்ச் 13ம் தேதி, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எட்டு "சீட்' ஒதுக்குவதாகக் கூறினர். நான் பதில் ஏதும் ஏதும் சொல்லவில்லை. மறு நாள் காலை, 11 மணிக்கு பன்னீர் செல்வமும், செங் கோட்டையனும் என் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் புரியவில்லை. நேற்று ஒரு எண்ணிக்கையில் "சீட்' தருவதாகக் கூறினார்களாம். அது கொடுக்க முடியாத நிலையாம். ஒன்றை குறைத்துக்கொண்டு ஏழு சீட் தான் தர முடியும் எனக் கூறுகின்றனர்' என்றனர். "கூட்டணியை விட்டு வெளியே போ' என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? நான், "தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல பதவிகளுக்கு வாருங்கள்' என வாழ்த்துச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதேசமயம், எங்களுக்கு 18 தொகுதி தருவதாகவும், 19 தொகுதி தருவதாகவும், வைகோ மறுக்கிறார் என்றும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல்கள் தரப்பட்டன.

மார்ச் 15ம் தேதி இரவு, அ.தி.மு.க.,விலிருந்து பூங்குன்றன் தொடர்புகொண்டு, "அம்மா இரண்டு பேரை உங்களுடன் பேச்சு நடத்த அனுப்பி வைக்கிறார்' என்று சொன்னார். வீட்டுக்கு வந்தவர்கள், ஒன்பது தொகுதிகள் தருவதாகக் கூறினர். "போயஸ் கார்டனுக்கு வாருங்கள்' என்றனர். "நான் வரவில்லை. வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டியதிருக்கும். மனச் சங்கடம் வந்துவிடும். நான் கேட்ட, 23 தொகுதிகளில் இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டு, 21 தொகுதிகள் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், வருகிறேன்' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளில், இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, 74 இடங்கள் போக, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு முடியாத நிலையில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தால், ம.தி.மு.க.,வை பிடரியைப் பிடித்து, நெட்டித் தள்ளியது தவிர வேறென்ன? "இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம்.

மார்ச் 19ம் தேதி, ம.தி.மு.க.,வின் உயர்மட்டக் கூட்டம் தாயகத்தில் நடந்தது. 56 நிர்வாகிகள் பேசினர். 48 பேர் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்றனர். இரண்டு பேர் மட்டும், 20 தொகுதி வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றனர். ஆறு பேர், தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர். அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம். காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் எதேச்சிகாரத்திலும், ஆணவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. என் முடிவுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியது, அரசியல் ஆதாயம் கருதித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்று கணினியில் பணி செய்பவர்கள் முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க., ஒருபோதும் நினைக்காது. மக்கள் மத்தியில் ஜாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க., தீர்மானம் போட்டது. இதே முடிவுடன் கட்சி மீண்டும் நடைபோட தற்போதைய சூழ்நிலை உருவாகியுள்ளது; இது, காலம் தந்த அருட்கொடை. அ.தி.மு.க.,விலிருந்து விலகியது, நாங்கள் விரும்பி எடுத்த முடிவல்ல; காலத்தால் ஏற்பட்ட முடிவு. இந்த முடிவில் ஒரு சதவீதம் கூட, மறு பரிசீலனை செய்ய இடம் கிடையாது. அ.தி.மு.க., கூட்டணியில் ம,தி.மு.க.,வுக்கு, 35 இடங்கள் கொடுத்தால் கூட மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. நன்றி: இமயம் "டிவி'

வைகோ பொதுச் செயலர், ம.தி.மு.க.,
இயற்பெயர் : வை.கோபால்சாமி
வயது : 67
சொந்த ஊர் : கலிங்கப்பட்டி, நெல்லை மாவட்டம்.
ஆரம்பகாலம் : தி.மு.க.,வின் முன்னணித் தளபதி
நிறுவனர் : மறுமலர்ச்சி தி.மு.க.,
ஆண்டு : 1994
பதவி : பொதுச் செயலர்
அனுபவம் : தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,
குறிப்பு : சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல்வாதிகளில், மிக அதிக காலம் சிறைவாசம் இருந்தவர்.

Rajsekar N - Chennai,இந்தியா
2011-03-27 04:21:21 IST Report Abuse
மாவீர‌ரே, ப‌க்கா திமுக‌கார‌னான‌ நான் உங்க‌ள் மேல் கொண்ட‌ அன்பால், உங்க‌ளையே த‌லைவ‌னாக‌ ஏற்று கொண்டு இன்றுவ‌ரைக்கும், உங்க‌ள் வ‌ழியில் ந‌ட‌க்கிறேன். க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நீங்க‌ள் கொண்ட‌ அதிமுக‌ கூட்ட‌ணி என‌க்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பிடிக்க‌ வில்லையென்றாலும், உங்க‌ளுக்காக‌ ஏற்றுகொண்டேன். ஆனால் இவ்வ‌ள‌வு தூர‌ம் ந‌ம‌க்கு அவ‌மான‌ம், அநீதி இழைக்க‌ப‌டும் என்று க‌ன‌வில் கூட‌ நினைத்து பார்த்த‌தில்லை. இனிமேலும் பொறுத்துகொண்டிருக்க‌ நாம், காந்தி, ஏசு அல்ல‌. அடிப்ப‌வ‌ரை திருப்பி அடிபோம். அணைப்ப‌வ‌ரை உறுதியுட‌ன் அணைப்போம். க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் திமுக‌வில் இருந்து வெளியேறியிருந்தாலும் நாம் திமுக‌தான் ந‌ம‌க்கு தாய் க‌ழ‌க‌ம். நேற்றுவ‌ரை நாம் இருந்த‌ கூட்ட‌ணி பேய் கூட்ட‌ணி. இனிமேலும் கால‌ம் க‌ட‌த்த‌ வேண்டாம். க‌லைஞ‌ர்தான் ந‌ம‌க்கு ந‌ல்ல‌து.
Reply
Sasikala J - Trichy,இந்தியா
2011-03-27 04:10:02 IST Report Abuse
அன்புள்ள‌ அண்ணா, நீங்க‌ள் செய்த‌து மிக‌ச்ச‌ரி. எதைசெய்தாலும் முழுமையாக‌ செய்ய‌வேண்டும். த‌ற்போது நம‌து எதிரி ம‌ட்டும‌ல்ல‌, அனைத்து த‌மிழ்ம‌க்க‌ளின் எதிரியும் மேட‌ம் செல்வி ஜெய‌ல‌லிதாதான். உங்க‌ள் ஒருத்த‌ரை ம‌ட்டும் அவ‌ர் அவ‌மான‌ப‌டுத்த‌ வில்லை. ந‌ம் அனைவ‌ரையும் கேவ‌ல‌ப‌டுத்திவிட்டார். த‌ய‌வுசெய்து, உங்க‌ள் ப‌ல‌ம் என்ன‌ என்று நிரூபிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம். உண்மையை சொல்ல‌போனால், நாம் மேட‌ம் கூட‌ கூட்ட‌ணியில் இருந்தாலும், திமுக‌ தான் வெல்லும். எம்.ஜி.ஆருக்கு கிராம‌ங்க‌ளில் இருந்த‌ செல்வாக்கு இன்று திமுக‌வின் ம‌க்க‌ள் ந‌ல‌திட்ட‌த்தினால், திமுக‌வுக்கு இருக்கிற‌து. என‌வே, நாம் இனிமேல் எப்போதும் ஜெயிக்கும் அணியில் தான் இருக்க‌ வேண்டும். யாருக்கும் உப‌யோக‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தை விட‌, ந‌ம்மால் முடிந்த‌ வ‌ரைக்கும் நாட்டை வ‌ள‌ப்ப‌டுத்த‌ வேண்டும். அத‌ற்கு ந‌மக்கு இருக்கும் ஒரே வ‌ழி, திமுக‌தான். இது என்னுடைய‌ வேண்டுகோள் ம‌ட்டும‌ல்ல‌, என்னை மாதிரி ஹாஸ்ட‌லில் இருக்கும் ப‌ல‌ரின் எதிர்பார்ப்பும் இதுதான். ப‌ள்ளிக்கூட‌ நாட்க‌ளில் இருந்தே எங்க‌ளுக்கு மேட‌ம் தான் பிடிக்கும். ஆனால் க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் அவ‌ருடைய‌ ந‌ட‌வ‌டிக்கை சுத்த‌மில்லை. அதிலும் நம்பிக்கையாக‌ இருந்த‌ உங்க‌ளை வெளியேற்றிய‌து எங்க‌ள் யாருக்கும் பிடிக்க‌ வில்லை. ந‌ல்ல‌ அர‌சிய‌ல்வாதியான‌ நீங்க‌ள், த‌ய‌வுசெய்து முடிவெடுத்து திமுக‌வுக்கு ஆத‌ர‌வு கொடுங்க‌ள்.
Share this comment
chozhan - Chennai,இந்தியா
2011-03-27 03:55:11 IST Report Abuse
இனி யாரோடும் கூட்டு வேண்டாம்...அனைத்தும் அட்டை பூச்சிகள்...மதிமுக தமிழகத்தை ஆள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..மக்கள் பிரச்சனைகளுக்கு ஒலிக்கும் உங்கள் தன்னலம் அற்ற குரல் போதும்...ஸ்டெர்லைட் ஆலையின் விபரீதம் பற்றி அறிந்தும் உங்களை தவிர இன்றுவரை எந்த அரசியல்வாதியும் போராடவில்லை...மக்களின் மனதில் உங்களுக்கு சராசரி அரசியல்வாதிகளை விட மிக சிறந்த மதிப்பு உள்ளது..தயவு செய்து எதிர் வரும் காலங்களில் தேர்தல்களை புறக்கணிக்காதீர்கள்...அது மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும்,உங்கள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த மக்களுக்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.வெற்றி மட்டுமே குறிக்கோளாய் இருக்க நீங்கள் ஒன்றும் ஜாதி கட்சி நடத்தவில்லை ..20 ஆண்டுகளாக தோல்விகள் தானே அதிகம்..ஆனால் இன்றும் வரை மக்கள் உங்கள் மீது ஒரு குறையும் சொல்லவில்லை ...பின் ஏன் புறக்கணிப்பு ? தனியாகவோ, பஜகவுடனோ சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமே!
srini - NJ,யூ.எஸ்.ஏ
2011-03-27 03:50:10 IST Report Abuse
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோடு இணையலாம். அதிமுக ஜானகி அணியும், அதிமுக ஜெயா அணியும் இணையலாம், ஆனால் மதிமுக திமுகவோடு இனைய கூடாதோ? பிரிந்து சென்றது மீண்டும் இணைவது நல்ல விஷயமே. மக்கள் திலகம் கூட அதிமுகவை திமுகவோடு இணைத்து விட வேண்டும் என்றுதான் நினைத்தார். சில விஷமிகளால் அது நடக்க வில்லை.
lathasrinivasan - Kanyakumari,இந்தியா
2011-03-27 03:35:32 IST Report Abuse
ஜெய‌ல‌லிதா ஒரு கொடிய‌ விஷ‌ப்பாம்பு, அவ‌ரிட‌ம் சேர்ந்த அனைவ‌ரும் வாழ்ந்த‌தாக‌ ச‌ரித்திர‌ம் இல்லை. நால‌ரை வ‌ருட‌ம் க‌ட்சியை ப‌ற்றியோ, நாட்டைப‌ற்றியோ எந்த‌வொரு க‌வ‌லையும் இல்லாம‌ல் கோட‌நாட்டில் உல்லாச‌மாய் இருந்து விட்டு, அதும‌ட்டுமின்றி, த‌ன்னை தேர்ந்தெடுத்த‌ ஆண்டிப‌ட்டியை அனாதைப‌ட்டியாக்கிவிட்டு, காணாம‌ல் போன‌வ‌ர் லிஸ்டில் இருந்துவிட்டு, த‌ற்போது தேர்த‌ல் என்ற‌வுட‌ன் மேக்க‌ப் போட்டுக்கொண்டு, யாரோ எழுதிகொடுத்த‌தை, ஏ.சி. காரினுள் இருந்துகொண்டு கீர‌ல்விழுந்த‌ ரெக்கார்ட் மாதிரி திரும்ப‌ திரும்ப‌ வாசித்தால், ந‌ம்பிவிட‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌டைய‌ர்க‌ளா? எல்லோரையும், எப்போதும் ஏமாற்ற‌ முடியாது. இனிமேல் ஜெயல‌லிதாவின் அர‌சிய‌ல் வாழ்வுக்கு முடிவு க‌ட்ட‌ப்ப‌டும். வைகோவே, சாதார‌ண‌ த‌ண்ணிபாம்பு கூட‌, த‌ன்னை துன்புறுத்த‌ நினைத்த‌வ‌னை, க‌டிக்க‌ நினைக்கும். ஆனால், உன்னையே இல்லாம‌ல் ஆக்க‌ திட்ட‌ம் போட்டு, வெளியேற்றிய‌ ஜெயாவை இனிமேல் எக்கால‌த்துக்கும் ந‌ம்ப‌கூடாது. அடிவாங்கி, அடிவாங்கி அழுவ‌தை விட‌, உன் ப‌ல‌ம் என்ன‌ என்ப‌தை காண்பிக்க‌, ஏன் திருப்பி அடிக்க‌ கூடாது? யோசிக்க‌ வேண்டாம், செய‌லில் இற‌ங்குங்க‌ள். த‌ட்டுங்க‌ள், திற‌க்க‌ப‌டும் என்று க‌ர்த்தர் சொன்னார். புரிந்து கொள்ளுங்க‌ள். த‌ட்டுங்க‌ள், தாய்வீட்டை. முத‌ல்வ‌ரை ச‌ந்தியுங்க‌ள். ச‌திகார‌ர்க‌ளை, ச‌ந்தி சிரிக்க‌வையுங்க‌ள். சாக்க‌டையிலிருந்து விடுப‌ட்ட‌ ச‌ந்தோச‌த்தில், நாளைய‌ ச‌ந்த‌திக‌ளை வாழ‌வைக்க‌, ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌, மீண்டும் உங்க‌ளை த‌ள‌ப‌தியாக‌, கலைஞ‌ரின் போர்ப‌டை த‌ள‌ப‌தியாக‌ வ‌ர‌வேற்கிறோம்.
Share this comment
Chandra - Denver,யூ.எஸ்.ஏ
2011-03-27 02:41:51 IST Report Abuse
இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன்.
Periasamy VS - Karur,இந்தியா
2011-03-27 02:36:21 IST Report Abuse
சார் வணக்கம். ஐயா அப்துல் கலாம் சொன்னது போல " நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் சேருங்கள், அரசியலை வளர்பதற்காக அல்ல". நீங்க ஒரு நல்ல பொருளாதாரம் பேச கூடியவங்க. வெறும் அரசியல் வியாபாரிகள பத்தி எதிர்த்தோ, அவர்களுடைய யூகம், வாதம், முடிவுக்கு எல்லாம் தலை சாய்காதீங்க!!! பாருங்க.........தேர்தல் அறிக்கையினு எதோ ரெண்டுபேரும் குட்டிசுவரவிட கேவலமான கண்ணோட்டம். எங்களை வெறும் போராட்டம் அது இதுன்னு கூப்பிடாம (மொழி, இனம் சார்ந்த ஒரு போர்வை உங்களுக்கு வேறு இலக்கணம் தருகிறது, இது சார்ந்த போராட்டம், நடுத்தர வர்க்கத்துக்கு சரிபட்டு வராத ஒரு போக்கு). உழைக்கும் மக்களை உருவாக்க, உழைக்கும் மக்களை போற்ற, வேலை இல்லா மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த கூடிய, எங்களை நல்வழி படுத்தக்கூடிய, ஊக்கபடுத்த கூடிய நல்ல தலைவர் (ஜப்பான் மக்களை வழி நடத்துற மாதிரி) எங்களுக்கு தேவை!!!!!!!!. எங்களோட முன்னேற்றத்துக்கு ஊக்கபடுதுங்க, உதவி பண்ணுங்க, திட்டம் தீட்டுங்க, செயல் படுத்துங்க!!! . எங்களோட சோம்பேறித்தனமாக இருக்ககூடிய எங்கள் மனதுக்கு உத்வேகம் (குறைந்த பட்சம் ஊக்கபடுதுதல்) என்கிற உற்சாக டானிக் கொடுங்க!!!! மாசத்துல வெறும் நூறு- இருநூறு இளைஞனுக்கு முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி பண்ணி விடுங்க. அத பற்றி பொது கூட்டங்களில் இதுக்கு முக்கியதுவம் கொடுங்க. இலவச திட்டங்கள், விவசாய நலன் மற்றும் முன்னேற்றம், சிறுதொழில், இப்படின்னு பொது படியான விசயங்கள...... எப்படி வருது, அதனுடைய பொருளாதார பின்னணி என்ன?. இது போன்ற கருத்துள்ள செய்திகள பாமரனுக்கு கொண்டுபோய் சேருங்க. உழைப்பு, முன்னேற்றம், வருங்கால தமிழினம் ஒரு உழைப்பாளிகள் ஒருகினைந்த ஒரு மண்டலமா உலகம் போற்றனும் (ஜப்பான போல). நாங்க உழைக்கிற உழைப்பு, ஊக்கமில்லாமலும், தெளிவின்மையாலும் மனம் போகிற போக்கில பல இளைஞர்கள் டாஸ்மார்க் கடைகளில் காலங்களை கழிக்கிறோம். எங்களை சீர்படுத்த உங்களால மட்டும் தான் முடியும். வாழ்க உங்கள் பொது பணி!!!!!!!!!!!

Mallika Eswari - Trichy,இந்தியா
2011-03-27 02:26:16 IST Report Abuse
அ(சிங்க‌)திமுக‌வால், நீங்க‌ள் அசிங்க‌ப‌டுத்த‌ப‌ட்டு, அப்புற‌ப‌டுத்தப்ப‌ட்டு, அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌தை போக்க‌, திமுதான் ச‌ரியான தீர்வு. திமுக‌ என்றும் உங்க‌ளை கைவிடாது. செய்வீர்க‌ளா?
Seetha Srinivasan - cornor,வங்கதேசம்
2011-03-27 02:22:05 IST Report Abuse
நீங்க‌ள் திமுக‌ என்ற‌ நில‌த்தில் விதைக்க‌ப‌ட்டு, வ‌ள‌ர்ந்த‌ ஒரு ம‌ர‌ம். அத‌னால் உங்க‌ள் எண்ண‌ம் என்றுமே திமுக‌வாக‌த்தான் இருக்க‌ முடியும். இருக்க‌வும் வேண்டும். அத‌னால் த‌னி நில‌ம் காண‌, கால‌ம் இன்னும் க‌னிய‌வில்லை. க‌லைஞ‌ருட‌ன் சேருங்க‌ள். ஆணாக‌ இருந்தாலும், அவ‌ர் தான் தாய். திமுக‌ என்றுமே, உங்க‌ளின் தாய் தான்.க‌ர்த்த‌ரிட‌ம் பாவ‌ ம‌ன்னிப்பு கேட்ப‌தை போல‌, த‌லைவ‌ர்க‌லைஞ‌ர் க‌ர‌ம் பிடித்து, உங்க‌ள் ம‌ன‌குறை போக்குங்க‌ள். ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம், விட்டு விடாதீர்க‌ள்.
Share this comment
K Shekar - chennai,இந்தியா
2011-03-27 02:13:11 IST Report Abuse
அய்யா வைகோ அவர்களே, திமுக தலைவர் கொடுத்த இருபத்தி இரண்டு சீட்டுக்காக வீராவேஷதுடன் சாக்கடையில் போய் விழுந்தீர்கள். ஆனால் சாக்கடையில் விழுந்து சாதித்தது வெறும் ஆறு இடங்கள். கொஞ்சமாவது புத்தி இருந்தால், திமுக கொடுத்த இருபத்தி இரண்டு சீட்டுகளில் நின்று குறைந்த பட்சம் இருபது தொகுதிகளில் வென்றிருக்கலாமே? இதுவல்லவா ராஜ தந்திரம்? ஆனால் திமுவின் 22 இட‌த‌தை குறைகூறிய‌ நீங்க‌ள், இப்போது, 35 கேட்டு, 25 வ‌ந்து, 23, 21, 20, 19, 18 என்று த‌ன்மான‌த்தை விட்டுகொடுத்து, கெஞ்சிபார்த்து, க‌டைசியில் 12வ‌து கிடைக்கும் என்று காத்திருந்து, காத்திருந்து, 7 அல்ல‌து 8 தான் என்ற‌வுட‌ன் வேறுவ‌ழியே தெரியாம‌ல், புற‌க‌ணிப்பு என்ற‌ முடிவுக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டீர்க‌ள். அதாவ‌து, திமுக‌ கொடுத்த‌ 22 என்ற‌ சீட்டுக்கு வீம்பு காட்டிய‌ நீங்கள், இப்போது 7, 8 என்று ஏல‌மிட்ட‌தை பார்த்து வெந்து, நூலாகி, நூடுஸ்லாகி, இப்போது புல‌ம்பித‌விக்கிறீர். இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌துவென்றால், ப‌ர‌ம‌சிவ‌ன் க‌ழுத்தில் இருந்தால் தான் பாம்பிற்கே ம‌ரியாதை, அதைவிட்டு, ப‌ர‌ம‌சிவ‌ன் க‌ழுத்துக்கே சொந்த‌ம் கொண்டாடினால், அந்த‌ பாம்பு இருக்கும் இட‌ம் இல்லாம‌ல், ப‌ஞ்ச‌ம் பிழைக்க‌ வ‌ந்த‌வ‌ரும், ப‌யாஸ்கோப்பு காட்டிய‌வ‌ரும் அடித்து கொன்றுவிடுவார்க‌ள். ஒன்றும‌ட்டும் புரிந்துகொள்ளுங்க‌ள். த‌மிழ‌க‌ம் என்றுமே திமுக‌வையோ அல்ல‌து அதிமுக‌வையோதான் அரிய‌ணையேற்றும். இடையில் சிறிது நேர‌ விள‌ம்ப‌ர‌ம்மாதிரி, காங்கிர‌சைப்போல‌, உங்க‌ளைபோல‌ சில‌ர் நொடி இடைவெளியில் வ‌ந்து, பொழுதுபோக்குவீர்க‌ளே த‌விர‌, வேறொன்றும் உங்க‌ளால் செய்ய‌ முடியாது. நீங்க‌ள் முத‌லில் ந‌ல்ல‌வ‌ராக‌ இருந்து, இடையில் கெட்டுபோய், இப்போது வேறு வ‌ழியில்லாம‌ல் ந‌ல்ல‌வ‌ராக‌ ஆக்க‌ப‌ட்டுகொண்டிருக்கீறீர்க‌ள். ஆனால், மூன்றாவ‌து, நான்காவ‌து என்றெல்லாம் யோசிக்காம‌ல், திமுக‌வில் சேருங்க‌ள். ஏனென்றால், உங்க‌ளை பெற்ற‌து ம‌ட்டுமே உங்க‌ள் தாய். அத‌ன்பிற‌கு, வ‌ள‌ர்த்து, ஆளாக்கி, முக‌வ‌ரிகொடுத்து, 18வ‌ருடம் எம்.பி.ஆக்கி அழ‌குசெய்த‌து உங்க‌ளின் தாய்க‌ழக‌ம்தான். திமுக‌ என்ற‌ ஆல‌ம‌ர‌த்தில் இருந்து தோன்றிய‌ விழுது நீங்கள். ஆல‌ம‌ர‌த்துக்கு நீங்கள் ப‌ல‌ம். உங்க‌ளுக்கு ஆல‌ம‌ர‌ம் ப‌ல‌ம். அதைவிட்டு விட்டு, ப‌ட்டுபோன‌ வேதாள‌த்துக்குரிய‌ முருங்கைம‌ர‌த்தில் கூட்ட‌ணிவைத்துகொண்டால், ப‌ட்டுபோன‌ ம‌ர‌மே, உங்க‌ளையும் ப‌ட்டுபோக‌ செய்துவிடும். க‌லைஞ‌ர் என்றுமே உங்க‌ள் மீது கொலைப‌ழி சும‌த்திய‌தில்லை. டெல்லியில் இருந்துவ‌ந்த‌ செய்தி என்றுசொல்லி, உங்க‌ளை வ‌ஞ்சித்து வ‌ழிய‌னுப்பிய‌ த‌லைவி(தி)யின் குறுக்குபுத்தியில் வ‌ந்த‌ சூழ்ச்சித்தான் என்ப‌தை நீங்க‌ள் உண‌ர்ந்துகொள்ள‌தான் வேண்டும். ஆயிர‌ம்தான் சொன்னாலும், உங்க‌ளை சார்ந்து நிற்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருகால‌த்தில் திமுக‌வில் இருந்த‌வ‌ர்க‌ள் தான். அடுத்த‌க‌ட்சிக்கார‌ன், முன்னாள் அதிமுக‌ கார‌ன் ஒருவ‌னையாவ‌து உங்க‌ள் க‌ட்சியில் காட்டமுடியுமா? இந்த‌ உண்மை புரிந்துகொண்டால், புற‌ப்ப‌டுங்க‌ள், செய்த‌ த‌வறுக்கு பிர‌யாசித்த‌மாய், த‌லைவ‌ர் க‌லைஞ‌ரிட‌ம் சேருங்க‌ள். த‌மிழ‌க‌ம் வ‌ள‌மாகும். வ‌யிராற‌ உண்டு, ப‌சியாறும் ஏழை தாய்மார்க‌ள் ப‌சி போக்கும் ஒரு ருபாய் அரிசி திட்ட‌ம் காப்பாற்ற‌ப்ப‌டும்.

கருத்துகள் இல்லை: