ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வேலாயுதன் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கல் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்கள் மூவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான ராஜினியை 1996 ஆம்ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியளவில் கோண்டாவில் பகுதியில் வைத்து ராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தைச் சேர்ந்த காமினி சமன் உயனகே, ஏ.பி.சரத்சந்திர, டி.கமகே கித்சிறி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் மேற்படி மூவரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அம்மூவரில் காமினி சமன் உயனகேவும் டி.கமகே கித்சிறியும் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர்கள் சார்பில் வழக்குரைஞர் லக்மினி கிரிஹகம ஆஜராகியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக