இந்த தேர்தலில், தங்களை கடைசி நேரத்தில் கழற்றிவிட்ட, அ.தி.மு.க., வுக்கு ஓட்டளிப்பதில்லை என்பதில், ம.தி.மு.க., உறுதியாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தங்களின் பழைய நண்பர்களுக்கு கைகொடுக்கவும் முடிவெடுத்துள்ளது.இதற்காக, மிக வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதாவது, அ.தி.மு.க.,வையும், காங்கிரசையும் எந்தத் தொகுதியிலும் ஆதரிக்கக் கூடாது. தி.மு.க., - அ.தி.மு.க., நேரடியாக மோதும் தொகுதிகளில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது; காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்டும் போட்டியிடும் தொகுதிகளில், "தோழர்'களை ஆதரிப்பது; காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளில், பா.ஜ.,வை ஆதரிப்பது என, ம.தி.மு.க., தரப்பில் ரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
-நமது சிறப்பு நிருபர்-
-நமது சிறப்பு நிருபர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக