ஞாயிறு, 3 அக்டோபர், 2010

BJP.com lead by Congress.பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட் ; இப்படியும் கட்சி வளர்ப்பதா? பா.ஜ., நோட்டீஸ் அனுப்பியது

ஆளும் காங்கிரஸ் கட்சியே இப்படி சைபர்கிரைம் குற்றம் புரியலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.,வின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பா.ஜ., வின் மேலிடம். காங்கிரசுக்கும் ,பா.ஜ.,வுக்கும் இடையில் முக்கிய பிரச்னை மையமாக வைத்து பெரும் பிரச்னை இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தற்போது இரு கட்சிகள் இடையே இணயைதள விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

அகிலஇந்திய காங்கிரஸ் கட்சிதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.காம் என அட்ரஸ் பாரில் அடித்து பிரவுஸ் செய்யும் போது இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறது. பா.ஜ.,வின் உண்மையான முகவரி பிஜேபி.ஒஆர்ஜி ஆகும். பாரதியஜனதா கட்சியின் இணையதளத்தை பார்க்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பிஜேபி.காம் என டைப் செய்வர். எனவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாறு டொமைன் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, கட்காரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது, பி.ஜே.பி., பெயரை தவறாக பயன்படுத்தி சைபர் குற்றம் புரிந்துள்ள காங்கிரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த நோட்டீசில் இது போன்ற விஷம செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் , தங்களிடம் கேட்டால் இந்த பெயரை நாங்களே தருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.



போலீசார் குழப்பம் : இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் உயர்மட்டம் வற்புறுத்தலின் பேரில் இந்த குற்றம் புரியப்பட்டிருக்கிறதா அல்லது வேறு யாரும் இந்த செயலை புரிந்தனரா என போலீசார் குழம்பி போய் இருக்கின்றனர்.

இவ்வாறு மாற்று கட்சி பெயரில் எங்கள் இணைய தளத்திற்கு வழி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லை , எங்கள் கட்சி வெப்சைட்டுக்கு போதுமான ஹிட் உள்ளது. என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

tamilanban - chennai,இந்தியா
2010-10-03 17:19:40 IST
ஏற்கனவே மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்ற மேட்டர் நிறைய கைவந்த கலையாயிற்றே இது போன்று வோட்டு பெட்டியில் பிஜேபி தொட்டால் காங்கிரஸ் கிளிக் ஆகும் என்பதும் இதன்மூலம் நாம் அனைவரும் அறிய அவர்கள் நமக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்...
திப்புசுல்தான் - கடையநல்லூர்,இந்தியா
2010-10-03 17:06:46 IST
யப்பா மணி காங்கிரசை காந்தி கலைக்கசொன்னார்,ஆனால் நீங்கள் காந்தியைக் கொன்றவர்கள். சாத்தான் வேதம் ஓதக்கூடாது. உண்மையான கட்சிதொண்டராக உங்களை பார்த்தல் தெரியவில்லையே, லோக்கல்ல காங்கிரசே வெப்சைட்டே கலவான்குதுன்னு அழுவுற நீங்க, மீண்டும் ஆட்சிய புடிச்சி இந்திய வெப் சைட்ட சீனா திருடிட்டான் ஜப்பான் திருடிட்டான்னு கூப்பாடுபோடதான் லாயக்கு, கட்சி வெப்சைட்ட நிர்வாகம் பண்ண தெரியாதவர்கள் நாட்டை நிர்வாகம் பண்ணி>>>>>>...
மணி.வி - சென்னை,இந்தியா
2010-10-03 15:50:11 IST
கோர்ட்டே இந்திரா காங்கிரஸ் என அழைக்க தீர்ப்பு வழங்கியபோது, 'இந்திய தேசீய காங்கிரஸ்' என்ற பெயரை கைப்பற்ற , தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி பதவிகளுக்கு காங்கிரஸ் அடிவருடிகளைப் போட்டு கோல்மால் செய்ய முயற்சி எடுத்த காங்கிரசுக்கு இது ஒன்றும் புதிதல்ல!கட்சி 1969இல் பிறந்ததே தவறான வழியில்தானே!இதுபோன்ற அயோக்கியத்தனங்களை எதிர்பார்த்துதான் காந்தியே காங்கிரசைக் கலைக்கசொன்னார்! இந்திரா, நரசிம்ம ராவ் போன்ற வக்கிரத் தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கும் மகாத்மாவுக்கும் என்ன சம்பந்தம்?...
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-10-03 15:47:40 IST
இப்பொழுதுதான் காங்கிரஸ்சின் திருவிளையாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கியுள்ளது. எத்தனைக் காலம் தான் இவர்களால் ஏமாற்ற முடியும். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வியது. இப்பொழுது தாமரை மலர ஆரம்பித்து விட்டது. இனி நடக்க போவது என்ன? ப. மாதவன்...
மாணிக்கவேலு - paris,இந்தியா
2010-10-03 15:44:51 IST
பிஜேபி அளவுக்கு ஒரு தரமான அரசியல் கட்சி இப்போதைக்கு வேறு ஏதும் இல்லை....
tamilanban - chennai,இந்தியா
2010-10-03 15:15:11 IST
வெட்கம் கெட்ட மானம் ரோசம்கேட்ட கேவலமான கட்சி என்பது மீண்டும் நிரூபித்துவருகின்றனர்...
tamilanban - Chennai,இந்தியா
2010-10-03 15:09:41 IST
காங்கிரஸ் ஒரு முதுகெலும்பில்லாத கட்சி தாங்கிநிற்கும் முதுகை தேடுகிறது என்பது நிரூபனமாகியுள்ளது...
ராஜா - திருச்சி,இந்தியா
2010-10-03 14:27:14 IST
சொந்த கட்சி வெப் சைடை சரியாக பாதுகாக்க தெரியாதவர்கள் நாளை ஆட்சியில் அமர்ந்து நாட்டின் ரகசியங்களை எப்படி பாதுகாக்கப்போகிறார்கள்....
கணேஷ் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-03 14:23:56 IST
அரசியல் ஒரு வியாபாரம் இது வுன்களுக்கு தெரியாதா ?...
suresh - chennai,இந்தியா
2010-10-03 13:36:13 IST
இது காங்கிரீஸ் பார்ட்டிக்கு ஒன்றும் புதியது அல்ல எப்பொழுதும் அடுத்தவர் கொள்கை மற்றும் ஓட்டுகளை நம்பி கட்சி நடத்துவர் . அவர்களுக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது இப்பொழுது வெப் சைட்டும் கிடையாது...
manikandan - coimbatore,இந்தியா
2010-10-03 13:23:23 IST
இவர்களுக்கு கட்சியை வளர்பதுகு மக்கள் பணமும் பா ஜ க பெயரும் வேண்டும். இவங்க எப்போதும் இப்படித்தான் பாஸ். கேட்டால் எங்கள் மீசையில் மண் ஒட்டாது என்று கூறுவார்கள்....
கருத்து கண்சாமி - திண்டுக்கல்,இந்தியா
2010-10-03 13:01:09 IST
அரசே இப்டி பிராட் பண்ணா பொது மக்கள் என்ன பண்ணுவாங்க.சொல்லி குடுக்குற வாத்தியாரே பிள்ளைக்கு தவறான வழி காமிச்சு குடுக்குற மாதிரி.உண்மையல் இதெல்லாம் கேவலமான விஷயம்....
கணேஷ் - மலாத்தீவுகள்,மாலத்தீவு
2010-10-03 12:37:26 IST
வெப்சைட் முழு பெயர் கொடுத்தால் இந்த செய்தி உண்மையா இல்லையா எனத் தெரியவரும்.. pl visit www.bjp.com...
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 12:23:12 IST
காங்கிரஸ் ஒரு கலைவாணி கட்சி, மக்கள் எப்போதுதான் இந்த வஞ்சகர்களை அடையாளம் கண்டுகொள்ள போகிறார்களோ?...

கருத்துகள் இல்லை: