சென்னை: காலச்சுவடு இலக்கியவீதி சார்பில் ப.சரவணன் பதிப்பித்த "அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு' நூல் அறிமுகவிழா தென்னிந்திய திரைப்படவர்த்தக சபையில் நேற்று நடந்தது. நூலை ஊரன் அடிகளார் வெளியிட, முன்னாள் துணைவேந்தர் பொற்கோ பெற்றுக் கொண்டார். பேராசிரியர் வேங்கடாசலபதி, இலக்கிய வீதி இனியவன், பேராசிரியர் ராமசாமி, பேராசிரியர் வ.ஜெயதேவன் ஆகியோர்.
வடலூர் இராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாக்களை கொச்சைப்படுத்தி அவைகள் அருட்பாக்கள் அல்ல அவை மருட்பாக்களே என்று ஆதீனங்களும் மடாதிபதிகளும் இன்ன பிற சமய அடிப்படைவாதிகளும் பிரச்சாரம் செய்தனர். இறுதியல் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர் .அவ்வழக்கு ராமலிங்க சுவாமிகளுக்கு சாதகமாகவே தீர்ந்தது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் தமிழும் சைவமும் வளர்த்த நல்லை ஆறுமுக நாவலர் அவர்களே மடாதிபதிகளின் கைக்கூலி போன்று செயல்பட்டு மகான் இராமலிங்க சுவாமிகளுக்கு எதிரியாக செயல்பட்டார். இதனால் மனமுடைந்த சுவாமிகள் தனது பல எண்ணங்களை மாற்றிக்கொண்டு அமைதியாகி விட்டார்.
நாவலரும் பிற்காலத்தில் தன அடாவடிச்செய்கையை இட்டு மனம் மிக வருந்தினார் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக