இராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்க ராணுவம் அந்நாட்டுப் பணத்தில் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள ராணுவத்தின் பராமரிப்புச் செலவுகள் இராக் மக்களின் தலைமீதுதான் சுமத்தப்படுகிறது. எந்தநாட்டில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும் அந்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, அந்தக் கொள்ளைக்கு ஆகும் செலவையும் தலையில் கட்டி விடுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கமான நடவடிக்கையாகும். இதுதான் தற்போது இராக் ஆக்கிரமிப்பிலும் நடந்துள்ளது.
இராக்கில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய் வளத்தின் மூலம் வரும் வருமானம் அமெரிக்க ராணுவப் பராமரிப்புக்கு திருப்பி விடப்பட்டது. இந்த வருமானத்திலிருந்து 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்திற்கான கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்தின் வசம் இருந்தது. இந்தக்கணக்கை தணிக்கை செய்தபோது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவுக்கான கணக்கே இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. இராக் சீரமைப்பிற்கான சிறப்பு அதிகாரியின் கீழ் இந்தத் தணிக்கை நடத்தப்பட்டது.
மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாயை எந்தக் கணக்குகளில் செலுத்த வேண்டுமோ அந்தக்கணக்குகளில் செலுத்தவில்லை. இராக் பணத்தைச் செலவழிப்பதற்காக சில சிறப்பு கணக்குகளை துவக்கி அதில் பணத்தைப் போட வேண்டுமென்பது அமெரிக்க நிதித்துறையின் உத்தரவாகும். அந்த உத்தரவை அமெரிக்க ராணுவம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பணம் எங்கே போனது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான வேலை என்கிறது தணிக்கை அறிக்கை. வெறும் மூன்றாண்டு காலத்தில் மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் நிதியைத் தவறாகக் கையாளுதல் நடந்துள்ளது என்றால் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாயில் மோசடி நடந்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
தங்கள் தணிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறப்பு அதிகாரி ஸ்டுவர்ட் போவன், திருட்டு மற்றும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது என்கிறார். இந்த தணிக்கை அறிக்கையை அம்பலப்படுத்தியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகை, இராக் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் தங்கள் அரசு தோல்வியடைந்து வருகிறது என்பதில் ஏற்கெனவே இராக்கியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதே வேளையில், கோடி, கோடியாகக் கிடைக்கும் எண்ணெய் வருமானம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்ற கேள்வியையும் மக்கள் முன்னிறுத்துகிறார்கள் என்று அந்த பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
இராக்கியர்களைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஏற்கெனவே 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டு நிர்வாகம் மேற்கொண்ட செலவில் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எந்தவித கணக்கும் வைக்கப்படவில்லை. ஆனால் அப்போதைய நிர்வாகமே அமெரிக்காவின் கையில்தான் முழுமையாக இருந்தது. தற்போது காகித அளவிலாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள இராக் பிரதமரின் ஊடக ஆலோசகர் அலி முசாவி, கணக்கு வைக்கப்படாத பணத்தை இராக் திரும்பப் பெறும் என்கிறார்.
ஆனால் இராக்கிற்குள் அமெரிக்க ராணுவம் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததிலிருந்து தற்போது வரை எந்த ஒரு செலவுக்கும் கணக்கு காட்டுவதில் அமெரிக்க ராணுவம் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் இராக்கியர்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எண்ணெய் வருமானத்தில் கணிசமான பகுதியை எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா, அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விட்டுக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டை இராக்கிய மக்கள் முன்வைத்துள்ளார்கள். தற்போதுள்ள அரசு இது குறித்து பேச முன்வந்திருப்பதே மக்களிடம் கடும் கோபம் நிலவுவதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

(தீக்கதிர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக