யுத்த குற்றங்களை வெளியிடுவது, சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்ற திணைக்களம் விடுத்துள்ள தீர்மானத்தினால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான நிபுணர் குழு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
இந்த நிலைப்பாடு காரணமாக, வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான தகவல்கள் தொடர்பில் செயற்படுவதற்கும், இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விசாரிப்பதற்கு அந்த குழுவுக்கு முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் போர்க்குற்றங்களை வெளியிடுவதற்கு, சில இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது, ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என, அமெரிக்காவின் சட்ட வல்லுனர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து இலங்கைக்கும் பொருந்தும் என திவயின செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பான் கீ மூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
யுத்த குற்றங்களை வெளியிடுவது, சட்டவிரோதமானது ,அமெரிக்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக