Sivasankaran Saravanan : கேள்வி : சித்த மருத்துவர் சிவராமன் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கிறதாமே?
பதில் : ஆமாம் உண்மை தான். வாட்சப் வதந்திகளை பற்றிய ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் மருத்தவர் சிவராமன் வந்திருந்தார். எதிர் தரப்பு சிறப்பு விருந்தினராக பிராடு செந்தமிழன் மணியரசன் என்பவரும் வந்திருந்தார். கண் பார்வை குறைபாடு வந்தால் யாரும் கண்ணாடி அணியக் கூடாது, அது இயற்கைக்கு எதிரானது. ஏனென்றால் யாரும் பிறக்கும்போது கண்ணாடி போட்டுக்கொண்டு பிறப்பதில்லை என்று பேசியவர் செந்தமிழன். நீயா நானா நிகழ்ச்சிக்கு எப்படி வருவாரோ என நான் பயந்துகொண்டே இருந்தபோது நல்லவேளையாக இயற்கைக்கு மாறாக பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு தான் வந்தார.
பிராடு செந்தமிழனிடம் இது பற்றி கேள்வி கேட்டபோது நிகழ்ச்சியை விட்டு போய்விடுவேன் என பிலிம் காட்டினார். பிறகு மீண்டும் வலியுறுத்திக்கேட்கவே, " உலகத்துல நிறைய மருத்துவமுறைகள் இருக்கு. அதுல நீங்க படிச்ச இங்கிலீஷ் மெடிசன் ல மட்டும் தான் கண்ணாடி போட சொல்றாங்க. சித்த மருத்துவத்தில் கண்ணாடியே போடாம குணப்படுத்துகிற வழிமுறைகள் உள்ளன " என்றார்.
இதுவரைக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
அதற்கு பிறகு அங்கு நடந்ததை நான் சொல்கிறேன்.
கோடிக்கணக்கான பேர் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் இந்த பிராடு கூசாமல் பொய் சொல்கிறாரே என்று நான் விளக்கமளித்தேன். "இல்லை நீங்கள் சொல்வது தவறு. சித்த மருத்துவத்தில் கண்ணா டி போடாமல் செய்ய முடியும் என்றால் பிறகு எதற்காக அரசு சித்த மருத்துவமனைகளிலிருந்து கண் பார்வை பிரச்சினைக்காக அரசு கண் மருத்துவமனைக்கு எழுதித்தருகிறார்கள்? நீங்கள் தவறான தகவலை பதிவு செய்துள்ளீர்கள் " என்று பதிலளித்தேன். இந்த விளக்கத்தை அங்கிருந்த சிவராமன் ஆமோதித்தா ர். துரதிர்ஷ்ட வசமாக நான் தந்த பதல் விளக்கம் டிவியில் காட்டப்படவில்லை. ஒரு பொய்யான தகவல் தனது நேயர்களுக்கு போய் சேருகிறதே என விஜய் டிவிக்கும் கவலையில்லை.
எனக்கு சித்த மருத்துவர் சிவராமன் மீது என்ன வருத்தம் என்றால், அந்த இடத்தில சித்த மருத்துவத்துக்கு இருந்த ஒரே அத்தாரிட்டி அவர் தான். செந்தமிழன் சித்த மருத்துவர் இல்லை. அவர் பிராடு மட்டுமே. ஆனால் ஒரு பிராடு சித்த மருத்துவத்தில் கண்ணாடி அணியாமல் சரிசெய்யவியலும் என பொய்யுரைத்தபோது ஒரு சித்த மருத்துவரான அவர் எதுவும் பேசாமல் அமைதி காத்தார. பிறகு நான் தான் மேலே சொன்ன விளக்கத்தை தந்தேன். அதை ஆமோதிக்க மட்டுமே செய்தார்.
நம்மாழ்வார் டெங்கு காய்ச்சல் வந்தா ஆஸ்பத்திரிக்கு போனா செத்துடுவான், வீட்டுலயே இருந்தா பொழச்சிக்குவான் என பேசியபோது கூட அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்க மட்டுமே செய்தார்.
அந்த வகையில் அவர் மீது எனக்கு வருத்தமே. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. சிவராமன் போலி வைத்தியர் அல்லர் . படித்த சித்த வைத்தியர் தான். இப்போதாவது அவர், சித்த மருத்துவத்தில் கண்ணாடி போடாமல் பார்வையை சரிசெய்யும் வழிமுறைகள் எதுவுமில்லை என்ற உண்மையை ஒரு சமூக அக்கறையுள்ள சித்த மருத்துவர் என்ற அடிப்படையில் அவர் தெரவிக்கவேண்டும். இந்த வேண்டுகோளுக்கு அவர் நிச்சயம் பதிலளிப்பார் என நம்புகிறேன்..!

1 கருத்து:
என்ன புரிதல் என்று தெரியவில்லை..
சித்த மருத்துவமுறையில் இன்று ஏன் ஆங்கில மருந்துக்கு என்ன உடன்பாடு புரியவில்லை ஒருவர் மருத்துவர் என்றால் அவர் முற்றும் அறிந்தவர் அல்ல... பாரம்பரிய முறை மருத்துவம் இடத்திற்கு இடம் அவரவர் வாழ்வியல் முறையை வைத்து மாறுப்படும்.. இயற்கை வாழ்வியலின் சூழல்முறையை வாழ்வதுதான் சிறந்தது எனது வயது 28 எனக்கு நினைவு தெரிந்து வரை எந்த மருத்துவத்தையும் நான் பயன்படுத்தியதில்லை.. நல்ல வேளைஇன்று வரை நோய்நொடியில்லாமல் நலமாகவே இருக்கிறேன்... இடையில் ஏற்பட்ட சில நோய்களுக்கு எனது ஓய்வும் சரியான பழக்கவழக்கங்களாக மாற்றி கொண்டேன்.. எனக்கு நானே உதாரணம் அதனாலே இயற்கைசார் வாழ்வியல் சிறந்தது என நினைக்கிறேன்
கருத்துரையிடுக