புதன், 15 பிப்ரவரி, 2017

Flashback : எடப்பாடி பழனிசாமியின் சாதிவெறி .. போலீஸ்காரரை சாதி வெறிகொண்டு தாக்கினார்! எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது அடாவடி ..



மாலைமலர் ;  சேலம்: எடப்பாடி பழனிசாமியின்  சொந்த ஊரில் வசிக்கும் போலீஸ்காரர் ஒருவர், வணக்கம் வைக்காததால் அமைச்சர் தாக்கியதாக வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசுபவர், ‘‘நான் அமைச்சரின் சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அவரது வீட்டருகே வசித்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான், அமைச்சர் வீட்டின் முன்பாக எப்போது சென்றாலும் அவரை பார்த்து வணக்கம் வைப்பது வழக்கம். சமீபத்தில் ஒரு நாள் டூட்டி முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவசரமாக அவரை பைக்கில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன் . அப்போது வீட்டில் இருந்த அமைச்சருக்கு வணக்கம் வைக்க மறந்து விட்டேன்.
உடனடியாக அமைச்சருடன் இருந்தவர்கள், பைக்கோடு என்னை அமைச்சர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பைக்கை உதைத்து கீழே தள்ளிவிட்டு, அமைச்சர் வீட்டு தூணில் என்னை கட்டி வைத்தார்கள். அமைச்சரும் என்னை பெல்ட்டால் அடித்தார். எனது மகன், அமைச்சரின் காலில் விழுந்து ெகஞ்சி கூத்தாடி என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். என்னைப் போல் இதர சமூகங்களை சேர்ந்த பலரையும், அமைச்சரும், அவரது அண்ணன் கோவிந்தராஜீம் தாக்கி வருகின்றனர். அமைச்சர் ஊரில் இருக்கும் போதெல்லாம் நிறைய அராஜகங்களும், ரவுடியிசமும், கட்டப்பஞ்சாயத்தும் நடக்கிறது. எனக்கும் எனது உயிருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அமைச்சரின் அண்ணன் கோவிந்தராஜ் தான் பொறுப்பு. இவ்வாறு வீடியோவில் போலீஸ்காரர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

;
சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது. ஆட்சியமைக்கும் முயற்சியாக, ஆதரவு கடிதம் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலா, இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அதன்படி முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்மொழிவது என்பது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. தீர்ப்பு வெளியானதும் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: