செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ஆச்சார்யா.:தப்பிக்க வாய்ப்பில்லை? .. கவர்னர்-கார்டன் மோதல்!

தமிழகத் தின் அரசியல் எதிர் காலத்தை தீர்மானிக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் இறுதி வடிவம் எப்படி இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. விரைவுபடுத்திய தவே!
ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி கள் பி.சி.கோஷ் மற்றும் அமித்வராய் ஆகியோரை நீதிமன்றத்திலேயே அறிக்கை வெளியிடச் செய்த சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் மற்றும் கர்நாடக அரசு வழக்கறிஞராக சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான துஷ்யந்த் தவேவை கேட்டோம். ""ஜெ.வுக்கு 4 வருடம் தண்டனை என ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்த போது, ஜெ.வின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தத்து நிறைய ஆர்வம் காட்டினார். சிறைக்குப் போன 23 நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வேகத்தை சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டை விசாரித்து தீர்ப்பளிப்பதில் காட்டவில்லை. விசாரணை முடிந்து பல மாதங்களாகியும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை. இதுபோல பல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கும் இடம்பெற்றுவிடக்கூடாது என்ப தால்தான் நான் இந்த தீர்ப்பு விரைவாக வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டேன். ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிப்பதாக சொன்னார்கள்'' என்கிறார் துஷ்யந்த் தவே.
4 வாய்ப்புகள்! இதுபற்றி நம்மிடம் பேசிய சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள், ""இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அமித்வராய் தனது தீர்ப்பை எழுதி முடித்து விட்டார். அதை அவர் தனது சக நீதிபதியும் சீனியருமான பி.சி.கோஷிடம் கொடுத்துள்ளார். பி.சி.கோஷும் தனது தீர்ப்பை எழுதி முடித்து விட்டார். கோர்ட் வட்டாரங்களில் இந்தத் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக இருக்குமா என கேட்டதற்கு இரண்டு நீதிபதிகளும் ஆளுக்கொரு தீர்ப்பை எழுதலாம்.
அல்லது இரண்டு நீதிபதிகளும் சேர்ந்து சசிகலாவிற்கு தண்டனை என ஒருமித்த முடிவை எடுக்கலாம்.
மூன்றாவதாக நீதிபதி குமாரசாமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. எனவே மறுபடியும் கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கலாம்.
நான்காவதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழிய ரான ஜெ. இறந்து விட்டார். ஜெ.வுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில்- குறிப்பாக இந்த இந்த வகைகளில் ஊழல் செய்துதான் சொத்து சேர்த்தார்கள் என குறிப்பிடப்படவில்லை. ஆகவே, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்யலாம் என நான்கு வகைகளில் ஏதாவது ஒன்று தீர்ப்பில் இடம் பெறலாம்.

சமீபத்தில் இரண்டு நீதிபதிகளும் ஒன்றாக சேர்ந்து விவாதித்தார்கள். அது தீர்ப்புக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய போயஸ் கார்டன் உட்பட உள்ள சொத்துக்களை பற்றி தீர்ப்பில் என்ன குறிப்பிடலாம் என்பதை பற்றிய விவாதமாக இருந்தது என செய்தி பரவியது.அதற்குப் பிறகும் தீர்ப்பு வரவில்லையென்ப தால்தான் துஷ்யந்த் தவே சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். "ஒரு வாரத்தில் தீர்ப்பளிப் போம்' என சொன்ன நீதிபதிகள் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு தீர்ப்பின் இறுதி விவரங்களை தட்டச்சு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். தீர்ப்பு செவ்வாய் அல்லது புதன்கிழமை வரலாம். எப்படியும் இந்த வாரத்தில் வெளியாகிவிடும்'' என்கிறார்கள்.

தப்பிக்க வாய்ப்பில்லை -ஆச்சார்யா
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. மற்றும் சசிக்கு எதிராக கடந்த 18 வருடங்களாக வாதாடி வரும் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவிடம் பேசி னோம். ""எனக்கு கோர்ட் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் சட்ட வாய்ப்பு சார்ந்த தகவல்கள்படி இந்த வழக்கில் சசிகலாவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெ. ஓர் அரசு ஊழியர். அவர் மறைந்து விட்டார். அதனால் அவர் செய்த குற்றங்கள் மறைந்துவிடும் என சொல்ல சட்டத்தில் இடமில்லை. அவரது பெயரை வேண்டுமென்றால் அவர் மறைந்த காரணத்தால் நீக்க முடியும். அவர் செய்த குற்றத்தை நீக்க முடியாது. சொத்துக்குவிப்பு என்பதே பெரிய ஊழல்தான்.

இதில் ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரும் 36, போயஸ் கார்டன் என்கிற முகவரி யில் வசித்தார்கள். தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் செய்து சேர்த்த பணத்தை நான்குபேரும் கூட்டாக சதி செய்து, தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்தார்கள் என்பதுதான் இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக செயல் பட்ட நல்லம்ம நாயுடு  தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் அடிநாதமாக உள்ள குற்றச்சாட்டு. இதை ஏற்றுக்கொண்ட ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெ.-சசி வகையறாக்களுக்கு நான்கு வருடம் தண்ட னை கொடுத்தார். ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி விடு வித்தார்

குமாரசாமியின் தீர்ப் பின்படி தற்பொழுது சசிகலா குற்றமற்றவர். ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் தீர்ப் பளிக்கும் போது நிலைமை மாறிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கும் இரண்டு நீதிபதி களில் ஒரு நீதிபதி குற்றவாளி என சொன்னாலே போதும் சசிகலா குற்றவாளியாகி விடுவார். அதேபோல குமார சாமியின் தீர்ப்பு தவறு என மறுபடியும் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மறு விசாரணை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டால் குமாரசாமி தீர்ப்பு ரத்தாகிவிடும். சசிக்கு நான்கு வருடம் தண்டனை என சொன்ன ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பு அமலுக்கு வந்துவிடும். அதன் படி சசி குற்றவாளியாகி விடுவார்.

விடுதலை என்ற தீர்ப்பு வராத வரை சசிகலா குற்ற வாளி இல்லை என்ற நிலையை அடைய முடியாது. அவர் குற்றவாளி இல்லை என்கிற நிலைக்கு வர முடியாவிட்டால் அவரால் சட்டமன்றத் தேர்த லில் போட்டியிட முடியாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதி பெறாதவர் முதல்வராக சட்டமன்ற உறுப் பினர்களால் தேர்ந்தெடுக்கப் படவே முடியாது'' என்கிறார் ஆச்சார்யா.

கார்டனுக்கு எதிரான டெல்லி டீம்!
தமிழகத்தில் அ.தி.மு.க. வை ஓ.பி.எஸ். தலைமையில் உடைக்க மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் தலைமையில் ஒரு குழுவே இயங்கி வருகிறது. அந்தக் குழுவில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களான ஜெட்லியும் ரவிசங்கர் பிரசாத்தும் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கப் போகும் தீர்ப்பு குறித்த சாதக பாதகங்கள் பற்றிய விவா தம் இடம்பெறுகிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன், "சுப்ரீம் கோர்ட் வழக்கறி ஞர்கள் ஜெட்லியின் துறை சார்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள், ரவிசங்கர் பிரசாத்தின் சட்டத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுதான் ஓ.பி., மைத்ரேயன், தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் ஆகியோரை இயக்குகிறது' என்பதையும் தெரிவித்தார்கள்

ஓ.பி.யையும் நத்தம் விஸ்வநாத னையும் வருமான வரித்துறை அதிகாரி கள் மூலம் மிரட்டி உடைத்த இந்த டெல்லி குழு மாஃபா பாண்டியராஜ னையும் வருமானவரித்துறை மூலமே சரிக்கட்டியது என்று சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரது வருமான வரி கணக்கையும் கையில் எடுத்துள்ளது இந்தக் குழு. சசிகலா தரப்பு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 6 கோடி ரூபாய் அளித்துள்ளது. ""அந்த பணத்தை நீங்கள் எப்படி செலவு செய் கிறீர்கள் என்பதை நாங்கள் கண்காணிக்கிறோம்'' என வருமானவரித்துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.

இதுவரை (சனி இரவு) 35 எம்.எல்.ஏ.க்களை வருமான வரித்துறை படிய வைத்துள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
கவர்னர்-கார்டன் மோதல்!

;ஓ.பி.எஸ். ராஜ்பவன் சென்றபோது அவரிடம் நீண்ட நேரம் பேசிய கவர்னர் ""நீங்க சொந்த காரணத்துக்காக ராஜினாமா செய்தீர்கள் என எழுதினீர்கள். அதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். மீண்டும் அதை நீங்கள் வாபஸ் பெற முடியுமா? என சட்ட வல்லுநர்களை கேட்டு சொல்கிறேன்'' என சொல்லியிருக்கிறார். சசிகலா கவர்னரை சந்தித்தபொழுது, ""134 எம்.எல். ஏ.க்கள் என்னை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத் திருக்கிறார்கள்'' என சொன்னபோது கவர்னர் பொங்கியெழுந்து விட்டார்.

134 பேர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கையெழுத்தை காட்டுகிறீர்கள். இந்த கையெழுத்து உண்மை யானது என நான் எப்படி தெரிந்து கொள்வது?'' என கவர்னர் கோபம் காட்ட, ஓ.எஸ்.மணியனும், திண்டுக்கல் சீனிவாசனும் கவர்னரை பார்த்து கோபத்துடன் ""நீங்கள் மகாராஷ்டிராவில் இருந்து வருவதற்கு இவ்வளவு நாட்கள் ஏன் எடுத்துக் கொண்டீர்கள். அதில் உள்நோக்கம் இருக்கிறது. இப்பொழுது நாங்கள் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற் பட்டவர் என்பதை மீறுகிறீர்கள். அ.தி.மு.க.வை உடைக்க நினைக்கிறீர்கள்'' என ஆளுநரை அவர் முகத்துக்கு நேராக குற்றம் சாட்டினார்கள்'' என்கிறது டெல்லி வட்டாரம்.>இதை கேட்டுக்கொண்ட கவர்னர் ஒரு அறிக்கையை தயார் செய்வதற்காக தலைமை செயலாளரையும் காவல்துறை தலைவரையும் சந்தித்தார். காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் ""சசிகலா ஆதரவு எம்.எல். ஏ.க்கள் எத்தனை பேர் கூவத்தூரில் இருக்கிறார்கள்?'' என கவர்னர் கேட்டதற்கு ""100 பேர் இருக்கிறார்கள்'' என பதில் சொன்னார் டி.கே.ராஜேந்திரன். தலைமைச் செயலாளரிடம், ""முதல்வர் பதவியேற்பு விழா எப்படி நடத்த வேண்டுமென்பதை கவர்னர் மாளிகைதான் முடிவு செய்யும். கவர்னர் மாளிகை சொல்வதற்கு முன்பு நீங்கள் யாரிடம் கேட்டு பல்கலைக்கழக மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தீர்கள்?'' என கிடுக்கிப் பிடி கேள்விகளை கேட்டார் கவர்னர்.


;சசிகலாவுக்கு தகுதியில்லை!>அதிகாரிகளுடனான ஆலோ சனைக்குப் பிறகு ஒரு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் ஜனாதி பதிக்கும் அனுப்பிவைத்தார் கவர்னர். அந்த அறிக்கையில் சசிகலாவுடன் வந்த அமைச்சர்கள் மிரட்டியதை மறக்காமல் குறிப் பிட்ட கவர்னர், ""சசிகலா சட்டமன்ற உறுப்பினராக இல்லை. சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கும்பொழுது, அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி அவருக்கு இருக்கவேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியாக உள்ள சசிகலாவுக்கு தீர்ப்பு வரும் சூழல் உள்ளது. எனவே சசிகலாவை தகுதியுள்ள முதல்வர் வேட்பாளராக கருதமுடியாது'' என கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

கவர்னரின் இந்த அறிக்கையைப் பற்றி கேள்விப் பட்ட சசிகலா "அ.தி.மு.க.வை பா.ஜ.க. அழிக்க நினைக் கிறது' என காங்கிரஸ் ஆதரவை ஒரு பக்கம் திருநாவுக்கரசர் மூலம் தேடினார். மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தலில் நிதியுதவி செய்த குஜராத் மாநில வணிகர் மூலம் மோடிக்கு தன் மீதுள்ள எதிர்ப்புணர்வை குறைக்க முயற்சிசெய்தார்.>மாற்று முதல்வர்?

தமிழகத்தில் நடைபெறும் அனைத்தும் மோடியின் திருவிளையாடல் என்றும் மீடியாக் களின் கவனம் தேர்தல் நடக்கும் உத்திரபிரதேசத் திற்கு சென்றுவிடாமல் தமிழகத்தின் பக்கம் இருக்க மோடி செய்யும் வேலை இது என சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்ததும் டென்ஷனான சசிகலா, கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க புறப்பட்டார். மாமல்லபுரம் அருகே தண்டலம் என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு குரூப் எம்.எல்.ஏ.க்களும் கூவத்தூருக்கு அழைத்து வரப்பட்டனர். மொத்தம் 124 எம்.எல்.ஏ.க் கள் என கார்டன் தரப்பு சொன்ன இந்த எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசினார் சசிகலா.

ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பிறகு "தேவைப்பட்டால் நாம் மறுபடியும் கூடுவோம்' என சொன்னார். அங்கிருந்த முக்கிய நிர்வாகிகளிடம், ""மத்திய அரசு என்னை குறி வைக்கிறது. அதனால் எனக்கு பதில் வேறொருவரை முத லமைச்சர் வேட்பாளராக நிற்க வைத்து மத்திய அரசின் சதியை முறியடிப்போம்'' என சொல்லியுள்ளார். கூவத்தூரிலிருந்து கார்டன் திரும்பிய சசிகலா, ""கட்சியை பிளவுபடுத்தவே கவர்னர் காலம் கடத்துகிறார்'' எனக் குற்றம்சாட்டினார்.

சசிக்குப் பதில் செங்கோட்டையனா? ஓ.எஸ்.மணியனா? எடப்பாடி பழனிச்சாமியா? என அ.தி.மு.க.வினர் மத்தியில் விவாதம் தொடங்கியது.>ஓ.பி.எஸ். அணிக்குத் தாவல்!

; 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தொடங்கிய ஓ.பி.எஸ். அணியில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் சேர்ந்தார். அன்றிரவு அ.தி.மு.க. எம்.பி.க்களின் கூட்டம் போயஸ் கார்டனில் நடந்தது. லோக்சபா, ராஜ்யசபா இரண்டையும் சேர்த்து 49 எம்.பி.க்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் 24 எம்.பி.க்கள் ஆப்செண்டாகியிருந்ததைப் பார்த்து அப்செட்டானார் சசிகலா.

இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி.அசோக்குமாரும் நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரமும். பிப்.11-ஆம் தேதி காலையில் ஓ.பி.எஸ். பக்கம் வர, மாலையில் திருப்பூர் எம்.பி. சத்யபாமா வந்தார். பன்னீரின் தேனி மாவட்டத்தில் அவர் தயவில் சீட் வாங்கி ஜெயித்த பெரியகுளம் டாக்டர் கதிர்காமு வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

பன்னீரின் பூர்வீக ஊர் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அடங்கிய விருதுநகர் மாவட்டத்தில் தனித் தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா மதில்மேல் பூனையாக இருக்கிறார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து ஜெயக்குமார், கே.சி.வீரமணி, நிலோஃபர் கபில் எனப் பல பெயர்கள் அடிபடுகின்றன. ஜம்பிங் தொடர்கிறது.   நக்கெஎரந் நக்கெஎரந்   nakkeeran

கருத்துகள் இல்லை: