செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ராதாரவி: தி.மு.க.வுல சேர்ந்துக் குறேன், அதுக்குப் பிறகு வச்சுக் கிறேன் கச்சேரிய.

நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணத்தில் தி.மு.க.வின் செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரு மான மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியும் ட்விட்டரில் சசிகலாவை விமர்சித்தும் பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டிருக் கிறார் அ.தி.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ.வும் நடிகருமான ராதாரவி. இப்போது அ.தி.மு.க. வில் இருக்கிறாரா? இல்லை தி.மு.க.வில் சேரப்போகிறாரா? இதற்கு மட்டுமல்ல, பலவற்றிற்கும் விடை கிடைக்க ராதாரவியைத் தொடர்புகொண்டோம். “"தாமிரா டைரக் ஷன்ல "ஆண் தேவதை'’ஷூட்டிங்ல இருக்கேன், அங்கே வந்துருங்க'’என்றார் ராதாரவி. ஷாட் பிரேக்கில் நம்மிடம் பேசத் தொடங்கினார்.
நக்கீரன்: அ.தி. மு.க.வில் இப்போது இருக்கிறீர்களா? இல்லையா?
ராதாரவி: என்னோட மொதல் படம் என்னன்னு கேட்குற மாதிரி இருக்கு. இப்பவும் நான் அ.தி.மு.க.விலதான் இருக்கேன், ஆனா ஜெயலலிதா அ.தி.மு.க. வுல. என்னை எம்.எல். ஏ.வாக்கி, எல்லோரும் என்னை நிமிர்ந்து பார்க்கக்கூடிய இடத்தில் வைத்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியும் விசு வாசமும் என்றைக்கும் என்னிடம் இருக்கும். அதுமட்டுமல்ல, சட்ட மன்றத்தில் செய்தித்துறை சார்பாக என்னை பதில் அளிக்கச் சொல்லி பெருமைப்படுத்தியிருக் கிறார். நான் பேசியதைக் கேட்ட காளிமுத்தண் ணன் "ஒரு சினிமா பார்ப் பது போல் இருக்கு'ன் னார்.



என்னோட மகன் திருமணத் திற்கு ஜெயலலிதா வந்தார். ஆனால் என்னோட தாயார் மறைந்தபோது, அவரை வரவிடாமல் சிலர் தடுத்தார் கள். அந்த வருத்தம் எனக்கும் உண்டு. அதற்குப் பிறகு படிப்படியாக என்னை ஓரங்கட்டினார்கள். அ.தி.மு.க. இப்ப இரண்டா இருக்கு, அதனால நான் அந்தக் கட்சில இருக்கேனா, இல் லையான்னு அவர்களுக்கே தெரியாது. 

நக்கீரன்: திடீர்னு மு.க.ஸ்டா லினைப் புகழ்ந்து பேசியிருக்கிறீர் களே? 

ராதாரவி: அட திட்ட மிட்டெல்லாம் பேசலங்க. தமிழ்நாட்ல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் பெரிய கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலை விட்டு ஒதுங்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா நானே நினைச் சாலும் அது முடியாது. ஏன்னா எங்க குடும்பமே அரசியலில் ஊறியது. சந்திரசேகர் வீட்டுக் கல்யாணத்துல மனசுல பட்டதை ஓப்பனா பேசிட்டேன், அவ்வளவுதான். கட்சியின் செயல்தலைவரானதும் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னேன். இப்ப அவரோட செயல்பாடு ஒவ்வொண்ணும் கண்ணியமாவும் நேர்மையாகவும் அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாவும் இருக்கு. சட்டசபையில் அவரது பேச்சு, செயல்பாடு எல்லாத்தையும் ரசிச்சுக்கிட்டேதான் இருக்கேன். 

சித்த வைத்திய சிகிச்சைக்காக நான் அடிக்கடி கேரளா போவேன். அங்க இருக்குற வைத்தியன், ஸ்டாலின் பெருமை பேசுறான்; நான் பேசக்கூடாதா? எனக்கு ஓரளவு அரசியல் ஜாதகம் தெரியும். இன்னும் 30-35 ஆண்டுகள் தி.மு.க.வையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தும் ஆற்றல் அன்புச் சகோதரர் ஸ்டா லினுக்கு உண்டு. 

நக்கீரன்: ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக பரவலான பேச்சு இருக்கிறதே? 

ராதாரவி:  சாவு மர்மத்தவிட ரெண்டு மூணு டாக்டர்கள் சேர்ந்துக்கிட்டு பேட்டி கொடுத்தான் பாருங்க, அந்த மர்மம் பெரிய மர்மமா இருக்கு. அப்பல்லோ ஓனரான ரெட்டி, ஏன் வரலைன்னு கேட்டா பேத்தி கல்யாணம்னு சொல்றானுக. ஒரு லேடி டாக்டர் சொல்லுது, ஜெயலலிதா முகத்துல புள்ளி இல்லைன்னு. ராஜாஜி ஹாலில் இருந்த ஜெ.உடலுக்கு அதிகாலை 5-30க்கு நான் அஞ்சலி செலுத்தும் போது மொகத்துல புள்ளியப் பார்த்தேன். லண்டன் டாக்டர் என்னடான்னா, போற வழியில சும்மா இந்த பிரஸ்மீட்டுக்கு வந்தேங்கிறான். கொஞ்ச நேரத்துல இந்த பிரஸ்மீட்டே கவுர்மெண்ட்தான் நடத்துச்சுங் கிறான். 
போட்டோவை ஏண்டா ரிலீஸ் பண்ணலேன்னா, வழக்க மில்லைங்கிறான். இதே அப்பல்லோவுல சோ படுத்திருந்த போட்டோ ரிலீஸ் ஆகலையா? காவேரி ஆஸ்பிட்டல்ல கலைஞர் உட்கார்ந்திருக்கிற போட்டோ ரிலீஸ் ஆகலையா? அப்பல்லோக் காரன் தனி சட்டம் வச்சிருக் கானா? 

என்னோட அக்கா மாப் பிள்ளை இதே அப்பல்லோவுல அட்மிட்டாகியிருந்தாரு. கண்ணாடி வழியா எங்களை பார்க்க விட்டாங்க. நிலைமை சீரியஸானதும், என்னைக் கூப்பிட்டு, ரத்த சம்பந்த உறவு யாருன்னு மெடிக்கல் ஹிஸ்டரியவே தூக்கிப் போட் டான். அதுமாதிரி ஜெயலலிதா மெடிக்கல் ஹிஸ்டரிய ரிலீஸ் பண்ணிட்டா வேலை முடிஞ்சு போச்சு, அதைவிட்டுட்டு என்னென்னமோ பண்றானுங்க. 

நக்கீரன்: கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருப்ப தாக வைகோ சொல்லியுள் ளாரே? 

ராதாரவி: அண்ணன் வைகோ நல்ல அறிவாளி, சிறந்த பேச்சாளி. என்ன பேசுறாரு, எதுக்கு பேசுறாருன்னு அவருக்கு மட்டும்தான் தெரியும். ஜெய லலிதா 75 நாள் ஆஸ்பத்திரியில இருந்த போது ஆஸ்பத்திரி சிறைன்னு சொன்னாரா?. லண் டன் டாக்டர் விசிட்டிங் கார்டெல்லாம் காமிச்சாரு. எலெக் ஷன்ல நிக்கப்போறேன்னு சொல்லி விஜயகாந்த கூட்டிக் கிட்டு வந்தாரு, நின்னாரா? பச்சைத்துண்டை தலைப்பாவா கட்டி ஒரு சபதம் போட்டாரு. அதுல எப்ப ஜெயிச்சாரு, தலைப்பாக்கட்டு என்னாச்சு? 

நக்கீரன்: "முதல்வர்' சசிகலா? 

ராதாரவி: அவுங்களோட எனக்கு அவ்வளவா பழக்க மில்லை. தி.மு.க.வுல சேர்ந்துக் குறேன், அதுக்குப் பிறகு வச்சுக் கிறேன் கச்சேரிய. 

-சந்திப்பு: ஈ.பா.பரமேஷ்வரன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்  நக்கெஎரந்

கருத்துகள் இல்லை: