ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் சென்னை திரும்புகிறார் .. நிரந்தர தீர்வு இல்லாமல் வரவேண்டாம் .. மக்கள் போர்க்கொடி!

மதுரை: அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டு விட்டுள்ளது. வழியெங்கும் அவரது காரை நிறுத்தி மக்கள் சாலை மறியல்செய்யலாம் என்று சந்தேகப்படுவதால் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும். வாடி வாசல் திறக்கும், காளைகள் துள்ளிக் குதித்து வரும் என்று கூறியிருந்தார் முதல்வர். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் அதற்குத் தடை போட்டு விட்டனர். அவசரச் சட்டம் கண் துடைப்பு, ஏற்க மாட்டோம், நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, அதுவரை வராதீங்க என்று கூறி விட்டனர். நாலாபக்கமும் அலங்காநல்லூரைச் சுற்றிலும் மக்கள் குவிந்திருக்கின்றனர். கொந்தளிப்புடன் உள்ளனர் சமரச முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன., இதனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் சென்னை திரும்பலாம் என்று கருதப்படுகிறது. அவர் சென்ஏனை திரும்பும் வழியெங்கும் மக்கள் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தக் கூடும் என்று சந்தேகம் வந்திருப்பதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து மதுரை விமான நிலையம் வரை போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து நிலைமை பரபரப்பாக காணப்படுவதால் மதுரை முழுவதும் தொடர்ந்து பதட்டம் தணியாமல் உள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை: