ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஆதியின் பின்னணியில் அரசியல் புரோக்கர் ( தமிழகத்தின் ஒரே ஒரு சக்சஸ்புல் புரோக்கராம் அவர்)

தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத போராட்டமாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு போராட்டம்.
இந்த போராட்டத்தின் தனி சிறப்பே யாரையும், யாரும் கட்டாயப்படுத்தி வரவைக்கவில்லை.
இதுதானாகவே சோ்ந்த கூட்டம். எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இங்கு அனுமதியில்லை. சாதி சங்களுக்கு சவுக்கடி, உடைக்க வழி தெரியாமல் முழித்தனா்.
அவசர சட்டம் என்பதே முதல் வெற்றியாகதான் இருந்தது. ஆனாலும் அரசியல் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் நிரந்தர சட்டத்தை நோக்கி போராட்டம் பயணமாகிறது.
முதலில் பில்டப் கொடுத்த, இவரை வைத்து காய் நகா்த்தினால் போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் என்று முடிவு செய்ததாம் அந்த மேல்மட்டம்.
எப்படி சாத்தியம்.  ஆதியின் சொத்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகா் கார்டனின் விசுவாசி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாராம்.

பேசப்பட்டதாம். என்ன சொல்லி வெளியேறுவது காரணங்கள் அலசப்பட்டது.
நாடக காட்சிகள் அரங்கேறியது. அனைத்து முக்கிய சேனல்களும் இதனை அடிக்கடி காட்டவேண்டும் உத்தரவு பறந்தது.
எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை படித்தார் ஆதி. ஏதோ சொல்ல போகிறார் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தனா் போராட்டக்காரா்கள்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி அவசியமில்லை என்பது போல ஆதியின் அந்தா் பல்டி அனைவரும் புரிந்து கொண்டனா்.  லைவ்டே
ஆதி என்கிற காயை நகா்த்த புரோக்கராக செயல்பட்டவருக்கு செம டோஸ், போராட்டத்தை ஒரு துளிக்கூட ஆட்டவும் முடியவில்லை, அசைக்கவும் முடியவில்லை.
உழைப்பும் வீண், செலவும் வீண், இப்ப என்ன செய்வது என்று மூளையை கசக்கி வருகின்றனர்.
சுப்ரமணியசுவாமி, ராதாராஜன் ஆகியோர் வரிசையில் நெட்டிசன்களிடம் திட்டு வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஆதியும் இணைந்துவிட்டார்.
கூட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளே புகுந்து கலவரம் கூட செய்ய ஏற்பாடும் செய்யப்படலாம் என்கிற அச்சம் நடுநிலையாளா்களிடம் உள்ளது.
மாணவா்களை வீட்டுக்கு அனுப்ப அதிரடி முடிவு எடுத்துள்ளது அரசு. பள்ளி கல்லூரிகளுக்கு வராத மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூறி ரகசிய உத்தரவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக தமிழா்களின் போராட்டமாக மாறிய, இந்த போராட்டத்தை இனி ஒன்றும் செய்ய முடியாது. நிரந்தர சட்டம் ஒன்று மட்டுமே தீா்வாக இருக்கும்.
இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும், புலனாய்வு செய்தியாளர்கள் கொடுத்த தகவல் தான். மேல் ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த செய்தியின் பொறுப்பை லைவ் டே...........   துறக்கிறது.

கருத்துகள் இல்லை: